Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs SRH : ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்.. டெஸ்ட் மேட்ச் ஆடிய உள்ளூர் வீரர்.. தெறிக்கவிட்ட நட்டி!

ஷார்ஜா : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் விராட் கோலி டிவில்லியர்ஸ் மீண்டும் அணியை கை விட்டனர்.

ஹைதராபாத் அணியின் நடராஜன் மிக சிறப்பாக பந்துவீசி பெங்களூர் அணியை கட்டுப்படுத்தினார்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அது தவறான முடிவு என கூறப்பட்டது. பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியும் தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்யவே விரும்பியதாக கூறினார்.

பெங்களூர் தடுமாற்றம்

பெங்களூர் தடுமாற்றம்

ஆனால், போட்டியில் பெங்களூர் அணி மோசமாக தடுமாறியது. தேவ்தத் படிக்கல் 5 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கோலி, டிவில்லியர்ஸ், பிலிப் என விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்

ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்

விராட் கோலி, ஏபி வில்லியர்ஸ் கடந்த போட்டி போலவே ரன் குவிக்க தவறினர். அதுதான் பெங்களூர் அணியின் சரிவுக்கு முக்கிய காரணம். கோலி 7 ரன்களும், டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். வாஷிங்க்டன் சுந்தர் 18 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் ஆட்டம்

டெஸ்ட் ஆட்டம்

குர்கீரத் சிங் மான் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கி டெஸ்ட் ஆட்டம் ஆடினார். கடைசி பந்து வரை களத்தில் நின்ற அவர் 24 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

பெங்களூர் அணி எடுத்த ஸ்கோர் மிகவும் குறைவு என்பதால் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக போட்டி மாறியது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சந்தீப் சர்மா 2, ஜேசன் ஹோல்டர் 2, நடராஜன் 1, நதீம் 1, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

நடராஜன் அபாரம்

நடராஜன் அபாரம்

தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 1 விக்கெட் வீழ்த்தினார். அவர் 16 டாட் பால்கள் வீசினார். அவரது பந்துவீச்சு கட்டுக் கோப்பாக அமைந்ததால் பெங்களூர் அணி அழுத்தத்தை சந்தித்தது.

Story first published: Saturday, October 31, 2020, 22:21 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+