Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம சிக்கலில் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரை தலைகீழாக மாற்றிய சன்ரைசர்ஸ்.. அதிரடி வெற்றி!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே ஆன போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி.

இந்த வெற்றி மூலம் 2020 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலை தலைகீழாக மாற்றி உள்ளது.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஜோஷ் பிலிப் 32, தேவ்தத் படிக்கல் 5, கோலி 7, டிவில்லியர்ஸ் 24, வாஷிங்க்டன் சுந்தர் 21, குர்கீரத் சிங் 15, கிறிஸ் மோரிஸ் 3 ரன்கள் எடுத்தனர்.

120 ரன்கள்

120 ரன்கள்

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. சந்தீப் சர்மா 2, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். நடராஜன், நதீம், ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

நெட் ரன் ரேட்

நெட் ரன் ரேட்

அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி விரைவாக இலக்கை எட்டி நெட் ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுடன் ஆடியது. அந்த அணியின் கேப்டன் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். சாஹா 39, மனிஷ் பாண்டே 26 ரன்கள் எடுத்தனர்.

ஜேசன் ஹோல்டர் அதிரடி

ஜேசன் ஹோல்டர் அதிரடி

கேன் வில்லியம்சன் 8, அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் வீழ்ச்சி இருந்த போதும் ஜேசன் ஹோல்டர் நவ்தீப் சைனி வீசிய 14வது ஓவரை குறி வைத்து பவுண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

வெற்றி

வெற்றி

ஹோல்டர் 10 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் ஹைதராபாத் அணி நான்காம் இடத்துக்கு முன்னேறியது. பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் நெட் ரன் ரேட் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியை விட மோசமாக சரிந்துள்ளது.

Story first published: Saturday, October 31, 2020, 23:45 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+