Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரர் நீக்கம்.. ஐபிஎல் தொடரிலேயே ஆட முடியாது.. ஆனால் அந்த வீரர் ஃபிட்.. ஹைதராபாத் பரபர மாற்றம்

ஷார்ஜா : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடியது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் நீக்கப்பட்டு இருந்தார்.

அவர் இனி ஐபிஎல் தொடரிலேயே ஆட முடியாது என கூறப்படுகிறது. அதே சமயம், கடந்த போட்டியில் காயமடைந்த விரிதிமான் சாஹா அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்தார்.

விஜய் ஷங்கர் நீக்கம்

விஜய் ஷங்கர் நீக்கம்

ஹைதராபாத் அணியில் முக்கிய ஆல் - ரவுண்டரான விஜய் ஷங்கர் நீக்கப்பட்டார். அவருக்கு கடந்த போட்டியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அவர் பாதிப் போட்டியில் விலகினார். அவரது காயம் கடுமையாக இருந்ததை அடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சாஹா நிலை என்ன?

சாஹா நிலை என்ன?

விஜய் ஷங்கர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியதாக அந்த அணி அறிவித்துள்ளது. அதே போட்டியில் காயம் அடைந்த விரிதிமான் சாஹா பெங்களூர் போட்டியில் பங்கேற்றார். அவரது காயம் குணமடைந்து விட்டதாக கூறினார் டேவிட் வார்னர்.

இளம் வீரர் சேர்ப்பு

இளம் வீரர் சேர்ப்பு

விஜய் ஷங்கருக்கு பதில் ஹைதராபாத் அணியில் அப்துல் சமத் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஆவார். விஜய் ஷங்கருக்கு மாற்று வீரராக அவர் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரை வைத்து இந்தப் போட்டியில் சமாளித்தார் வார்னர்.

Story first published: Saturday, October 31, 2020, 20:33 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+