Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs SRH : டாஸ் வென்ற ஹைதராபாத்.. அதிர வைத்த டேவிட் வார்னர் முடிவு.. கோலி ஹேப்பி!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 52 வது லீக் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணி இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தில்லாக சேஸிங் செய்ய முடிவெடுத்தார் வார்னர்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதால் மகிழ்ச்சி அடைந்தார். அந்த அணியில் ஆல் - ரவுண்டர் சிவம் துபே நீக்கப்பட்டு வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றார்.

டேல் ஸ்டெய்ன்

டேல் ஸ்டெய்ன்

மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த போட்டியில் மட்டும் ஆடினார். அவர் இந்தப் போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இசுரு உடானா அணியில் சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது.

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர் கடந்த போட்டியில் காயம் காரணமாக பாதி போட்டியில் விலகினார். அவரது காயம் மோசமாக இருந்ததை அடுத்து அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளார். பெங்களூர் போட்டியில் அவருக்கு பதில் அப்துல் சமத் அணியில் இடம் பெற்றார்.

பிளே-ஆஃப் நிலை

பிளே-ஆஃப் நிலை

இந்தப் போட்டியில் தோற்றால் ஹைதராபாத் அணியில் பிளே-ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வரும் என்பதால் அந்த அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அதே போல, பெங்களூர் அணி இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் இரண்டாவது அணியாகும் வாய்ப்பை பெறும்.

Story first published: Saturday, October 31, 2020, 20:19 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+