Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை வைச்சு சிஎஸ்கேவை வீழ்த்த திட்டம்.. ரகசியத்தை போட்டு உடைத்த ரிக்கி பாண்டிங்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது பற்றி ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.

Recommended Video

IPL 2020: Associate sponsor Future Group exits

தோனியின் கேப்டன்சி பற்றி புகழ்ந்து பேசிய அவர், அப்படியே சென்னை அணியை வீழ்த்த தங்கள் அணியின் திட்டம் என்ன என்பதையும் போட்டு உடைத்தார்.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தோனி கடந்த ஆகஸ்ட் 15 அன்று தன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்த நிலையில், அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

மேலும், தோனி சுமார் ஓராண்டு காலம் கழித்து கிரிக்கெட் களத்தில் ஆட உள்ளார். தோனி பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் ஆன ரிக்கி பாண்டிங் ஒரு பேட்டியில் பேசினார்.

பாண்டிங் பாராட்டு

பாண்டிங் பாராட்டு

தோனி தன்னை விட உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய அணிக்கு கேப்டன்சி செய்தார் என்பதை குறிப்பிட்ட பாண்டிங், அவரைப் போல எல்லா சமயங்களிலும் தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றார்.

கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்

கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்

"அவர் கேப்டனாக இருந்த போது இந்திய அணியை எப்போதும் கோப்பை வெல்ல வைத்தார். தன் வீரர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வரும் உத்தி அவரிடம் இருந்தது. அவர் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதை அவரது அணி வீரர்கள் விரும்பினார்கள்" என்றார் பாண்டிங்.

சிஎஸ்கே பலமான அணி

சிஎஸ்கே பலமான அணி

மேலும், சிஎஸ்கே அணி மற்றும் தோனி குறித்து பேசிய பாண்டிங், "சென்னை அணி எப்போதும் பலமான, கடும் போட்டி அளிக்கும் அணியாக ஐபிஎல்-இல் இருந்துள்ளது. அதில் பல விஷயம் தோனியின் தலைமைப் பண்பினால் கிடைத்தது" என தோனி குறித்து புகழ்ந்தார்.

தோனிக்கு எதிராக..

தோனிக்கு எதிராக..

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை கட்டுப்படுத்துவது பற்றி பேசிய ரிக்கி பாண்டிங், "தோனிக்கு எதிராக நான் பயிற்சி அளிக்க இருக்கிறேன். அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆடும் போது சென்னை அணிக்காக தன் பேட் மூலம் ரன் குவித்து வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

இதுதான் திட்டம்

இதுதான் திட்டம்

அதாவது, தோனியை ரன் குவிக்காமல் ஆட்டமிழக்கச் செய்தாலே டெல்லி கேபிடல்ஸ் அணியால் சிஎஸ்கே அணியை வீழ்த்தி விட முடியும் என்ற தன் திட்டத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார் ரிக்கி பாண்டிங். டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 24, 2020, 19:17 [IST]
Other articles published on Aug 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+