Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானங்கள்.. ஒரு வருட போராட்டம்.. தோனி இடத்தை கைப்பற்றும் இளம் வீரர்.. நம்ப முடியாத மாற்றம்!

துபாய் : சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார் ரிஷப் பண்ட்.

அப்போது டெஸ்ட் அணியில் விரிதிமான் சாஹா காயத்தில் இருந்ததால் வேறு சிறந்த விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில் தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டார்.

அதன் பின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனிக்கு மாற்று வீரராக தோனி அணியில் இடம் பெற்று இருந்த போதே ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

பாராட்டு

பாராட்டு

அதில் அவரது சொதப்பல்கள் காரணமாக விமர்சனங்கள் மற்றும் அவமானத்தை சந்தித்த பண்ட், தற்போது முதிர்ச்சி அடைந்து தோனியின் இடத்தை பிடிக்க தயாராகி உள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் அவரை தோனிக்கு மாற்று வீரர் என பாராட்டி வருகின்றனர்.

முதல் தொடரில் சதம்

முதல் தொடரில் சதம்

ரிஷபி பண்ட் தன் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடினார். அந்த தொடரின் கடைசி போட்டியில் அவர் சதம் அடித்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்ததால் கவனம் ஈர்த்தார். அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்தார்.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வந்தார். எனினும், திறமையான வீரர் எனக் கூறி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தது இந்தியா அணி நிர்வாகம்.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

அவரது பேட்டிங் பார்ம் முதலில் மோசமானது. அவர் நம்பிக்கை இழந்து பேட்டிங் ஆடி வந்தார். அதனால், மீள முடியாத அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றது அவரது பார்ம். எந்த இளம் வீரரும் சந்திக்காத அளவுக்கு கடுமையான விமர்சனத்தை சந்தித்தார்.

அவமானம்

அவமானம்

மேலும், ரசிகர்கள் அவரை குறி வைத்து அவமானப்படுத்தி வந்தனர். மைதானத்தில் அவர் விக்கெட் கீப்பிங்கில் சில தவறுகள் செய்யும் போதெல்லாம் தோனி, தோனி என கூச்சல் போட்டு ரிஷப் பண்ட்டுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். இணையத்தில் ரிஷப் பண்ட் மீம்ஸ் போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

இந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று தோனி ஓய்வு பெற்றார். அப்போது தோனிக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது. ரிஷப் பண்ட்டுக்கு பதில் தற்போது அணியில் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வரும் கேஎல் ராகுலை தான் அனைவரும் குறிப்பிட்டனர்.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

ஆனால், அந்த நிலையை 2020 ஐபிஎல் தொடரில் மாற்றிக் காட்டி உள்ளார் ரிஷப் பண்ட். அவரது பேட்டிங் தற்போது பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளது. முன்பு போல அவர் தவறான ஷாட்களை ஆடுவதில்லை. பொறுமையாக ஆடி நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முயன்று வருகிறார்.

ரிஷப் பண்ட் மாற்றம்

ரிஷப் பண்ட் மாற்றம்

அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும் அவரது பொறுப்பான பேட்டிங் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பண்ட் இப்படி பேட்டிங் செய்யவில்லை. இப்போது அணியை தன் தோளில் சுமக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல்

சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல்

இதே ஐபிஎல் தொடரில் பண்ட்டுக்கு போட்டியாக இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் நன்றாக ஆடி வருகின்றனர். சஞ்சு சாம்சன் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவித்து விட்டு அடுத்த மூன்று போட்டிகளில் ரன் குவிக்கவில்லை என்பது மட்டுமே ஒரு குறையாக உள்ளது.

முன்னாள் வீரர்கள் ஆதரவு

முன்னாள் வீரர்கள் ஆதரவு

எனினும், முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் ரிஷப் பண்ட் தான் என உறுதியாக கூறி உள்ளனர். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் அல்ல. அவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக உருவெடுத்து வருகிறார். அவருக்கு விக்கெட் கீப்பிங் கூடுதல் சுமை. சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சில டெக்னிகல் தவறுகள் உள்ளன. அதனால், பண்ட் தான் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என சஞ்சய் பங்கர், ஆஷிஷ் நெஹ்ரா, பிரையன் லாரா போன்ற முன்னாள் வீரர்கள் கூறி உள்ளனர்.

Story first published: Wednesday, October 7, 2020, 21:05 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+