Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 உள்ளூர் வீரர்களை வைத்து ராஜஸ்தானை வீழ்த்திய தினேஷ் கார்த்திக்.. தரமான சம்பவம்!

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு மூன்று உள்ளூர் வீரர்களை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தினார்.

12வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 174 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு இது குறைந்த ஸ்கோர் என்று சிலர் பயமுறுத்தினர். ஆனால், நிலைமை தலைகீழாக இருந்தது.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி பேட்டிங்கில் ஷுப்மன் கில் 47, சுனில் நரைன் 15, ராணா 22, ரஸ்ஸல் 24, கார்த்திக் 1, மார்கன் 34, கம்மின்ஸ் 12, நாகர்கோட்டி 8 ரன்கள் குவித்தனர்.

ராஜஸ்தான் திணறல் ஆட்டம்

ராஜஸ்தான் திணறல் ஆட்டம்

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே விக்கெட்களை பறிகொடுத்து மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் என சென்ற போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் இந்த முறை மோசமாக ஆடினர்.

மூன்று பந்துவீச்சாளர்கள்

மூன்று பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா அணியில் மூன்று உள்ளூர் வீரர்கள் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி ராஜஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தனர். சிவம் மவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி என மூன்று உள்ளூர் வீரர்களை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட் வேட்டை நடத்தினார் தினேஷ் கார்த்திக்.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

30 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி, 39 ரன்களுக்கு 3 வது விக்கெட்டை இழந்தது. அடுத்து 43 ரன்களை எட்டும் முன்பே 5 விக்கெட்களை இழந்து இருந்தது. டாம் கர்ரன் மட்டுமே கடைசி வரை போராடி 54 ரன்கள் சேர்த்தார்.

ராஜஸ்தான் தோல்வி

ராஜஸ்தான் தோல்வி

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் இரண்டு போட்டிகளில் 200 ரன்களை எளிதாக எடுத்த ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Wednesday, September 30, 2020, 23:38 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+