Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி மன்னனுக்கு வலை விரித்த ஸ்டீவ் ஸ்மித்.. வலையில் சிக்கிய அந்த 2 வீரர்கள்.. செம ட்விஸ்ட்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி மன்னன் ரஸ்ஸல் விக்கெட்டை வீழ்த்த ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தார்.

அந்த திட்டத்தில் ரஸ்ஸல் தப்பித்தாலும், வேறு இரண்டு வீரர்கள் அந்த வலையில் சிக்கினர்.

ஜோப்ரா ஆர்ச்சர் இந்தப் போட்டியில் மின்னல் வேகத்தில் பந்துவீச்சில் மிரட்டினார். அவரை வைத்து தான் ரஸ்ஸலை மடக்க இருந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 12வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணியில் முதல் ஓவரை வீசினார் ஜோப்ரா ஆர்ச்சர். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து இருந்தார்.

ஆர்ச்சர் துல்லியம்

ஆர்ச்சர் துல்லியம்

குறிப்பாக அவரது பந்துகள் 145 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி சீறிப் பாய்ந்தன. அவரது துல்லிய பந்துவீச்சால் கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ரன் குவித்தனர். அது பலவீனமாக அமைந்தது.

ஸ்டீவ் ஸ்மித் திட்டம்

ஸ்டீவ் ஸ்மித் திட்டம்

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஆர்ச்சருக்கு முதல் ஓவருக்கு பின் வாய்ப்பு அளிக்கவில்லை. அதிரடி மன்னன் ரஸ்ஸல் விக்கெட்டை வீழ்த்த அவரது ஓவரை தக்க வைத்துக் கொண்டார். 10வது ஓவரில் கொல்கத்தா 2 விக்கெட்களை இழந்தது. ரஸ்ஸல் களமிறங்கினார்.

சிக்கிய ஷுப்மன் கில்

சிக்கிய ஷுப்மன் கில்

12வது ஓவரில் ரஸ்ஸல் விக்கெட்டை வீழ்த்த ஆர்ச்சரிடம் பந்தை கொடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். அந்த ஓவரின் முதல் பந்தில் மற்றொரு பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் வீழ்ந்தார். அவர் நன்றாக ஆடி 47 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

அடுத்து 14வது ஓவரை வீசினார் ஆர்ச்சர். அந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவரது பந்துகளை தொடவே அஞ்சினர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.

ரஸ்ஸல் தப்பித்தார்

ரஸ்ஸல் தப்பித்தார்

ஆர்ச்சர் பந்துவீச்சில் ஐந்து பந்துகளை மட்டுமே சந்தித்த ரஸ்ஸல் அதில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். மூன்று டாட் பால் ஆடினார். ஆர்ச்சருக்கு எதிராக இதுவரை ரஸ்ஸல் பெரிதாக ரன் குவித்ததில்லை. விக்கெட்டையும் இழப்பார். ஆனால், இந்த முறை விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்.

ஆர்ச்சர் பந்துவீச்சு

ஆர்ச்சர் பந்துவீச்சு

மூன்று ஓவர்கள் வரை நெருப்பாக வீசிய ஆர்ச்சர் 17வது ஓவரை வீசுகையில் இரண்டு பவுண்டரி விட்டுக் கொடுத்தார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ரஸ்ஸல் அவரது ஓவரில் தப்பினாலும் அங்கித் ராஜ்புத் ஓவரில் சிக்கினார்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில் 47, ராணா 22, ரஸ்ஸல் 24, மார்கன் 34 ரன்கள் குவித்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது. 11 ஓவர்களில் 67 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து அந்த அணி தவித்தது.

Story first published: Wednesday, September 30, 2020, 23:02 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+