Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுபவம் இல்லாத வீரர்களிடம் பணிந்த ராஜஸ்தான்.. கொல்கத்தா வெற்றி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 12வது லீக் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் மிரட்டினார். எனினும், அந்த அணிக்கு 175 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பேட்டிங்கில் சொதப்பிய அந்த அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்று நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தன் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. கொல்கத்தா இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருந்தது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு அணிகளுமே கடந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இந்தப் போட்டியில் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில் மீண்டும் ஒரு முறை அபாரமாக ஆடி அணிக்கு நல்ல துவக்கம் அளித்தார். சுனில் நரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராணா 22 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆர்ச்சர் மிரட்டல்

ஆர்ச்சர் மிரட்டல்

கம்மின்ஸ் 12 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை நின்ற இயான் மார்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் துல்லியமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

இலக்கு

இலக்கு

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு சவாலான இலக்காக இருந்தது. துவக்க வீரராக இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

பட்லர் 21, சாம்சன் 8, உத்தப்பா 2, பராக் 1 ரன்னில் வரிசையாக ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர், பின் வரிசை வீரர்களும் கை விட்டனர். டாம் கர்ரன் மட்டுமே போராடி 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

கொல்கத்தா அணியில் சர்வதேச அனுபவம் இல்லாத கம்லேஷ் நாகர்கோட்டி 2, வருண் சக்கரவர்த்தி 2, சிவம் மாவி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ள கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சுனில் நரைன் தலா 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர்.

அபார வெற்றி

அபார வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது அந்த அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். சிறப்பாக பந்து வீசி சஞ்சு சாம்சன், பட்லர் என இரண்டு முக்கிய விக்கெட்களை சாய்த்த சிவம் மாவி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Thursday, October 1, 2020, 0:21 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+