Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

224 ரன்கள்.. ஐபிஎல் வரலாற்றின் மிகப் பெரிய சேஸிங்.. ஊதித் தள்ளிய ராஜஸ்தான்.. போராடித் தோற்ற பஞ்சாப்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 224 ரன்கள் இலக்கை எட்டி பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் குவித்தது.

மயங்க் அகர்வால் தன் முதல் ஐபிஎல் சதம் கடந்து அசத்தினார். ராகுல் 69 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப். அதை 19.3 ஓவரில் எட்டியது ராஜஸ்தான்.

9வது லீக் போட்டி

9வது லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 9வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணிக்கு இது இரண்டாவது போட்டி. பஞ்சாப் அணிக்கு மூன்றாவது போட்டி ஆகும்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணி இதே ஷார்ஜா மைதானத்தில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 216 ரன்கள் குவித்து வெற்றி பெற்று இருந்தது. எனினும், ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

கிறிஸ் கெயில் இல்லை

கிறிஸ் கெயில் இல்லை

பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்தப் போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் ஷார்ஜா மைதானம் சிறிய மைதானம். எளிதாக சிக்ஸ் அடிக்கலாம். ஆனால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நல்ல செய்தியாக ஜோஸ் பட்லர் இந்தப் போட்டியில் களமிறங்கினார்.

அதிரடி ஜோடி

அதிரடி ஜோடி

பஞ்சாப் அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். அதிலும் மயங்க் அகர்வால் சிக்ஸ் அடித்து தள்ளினார். ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து பவுண்டரி அடித்து வந்தார்.

மயங்க் அகர்வால் சதம்

மயங்க் அகர்வால் சதம்

அதிரடி ஆட்டம் ஆடி 9 சிக்ஸ், 7 ஃபோர் அடித்த கேஎல் ராகுல் 45 பந்துகளில் சதம் கடந்தார். இதுதான் அவரின் முதல் ஐபிஎல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 50 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து டாம் கர்ரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

ராகுல் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 13*, நிக்கோலஸ் பூரன் 25* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன்

ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்த போதும், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் அடி பஞ்சாபை மிரள வைத்தனர். ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாம்சன் 85 ரன்கள் எடுத்தார்.

மிகப் பெரிய சேஸிங்

மிகப் பெரிய சேஸிங்

ராகுல் டேவாட்டியா முதலில் பந்தை அடிக்கவே சிரமப்பட்டார். பின் காட்ரல் வீசிய ஓவரில் 5 சிக்ஸ் அடித்து 30 ரன்கள் எடுத்து போட்டியை மாற்றினார். அவர் 53 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய சேஸிங் ஆகும்.

தன் சாதனை

தன் சாதனை

இதற்கு முன்னதாக 2008இல் ராஜஸ்தான் அணி 215 ரன்கள் இலக்கை எட்டி டெக்கான் அணியை வீழ்த்தியதே பெரிய சேஸிங் ஆக இருந்தது. தன் சாதனையை தானே முறியடித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. தொடர்ந்து தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது ராஜஸ்தான்.

Story first published: Monday, September 28, 2020, 0:00 [IST]
Other articles published on Sep 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+