Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளான் பண்ணி அடித்த ஸ்டீவ் ஸ்மித்.. கும்ப்ளே திட்டம் குளோஸ்.. ஆரம்பித்தவுடன் அரண்டு போன பஞ்சாப்!

ஷார்ஜா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் திட்டமிட்ட அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணியை கதிகலங்க வைத்தார்.

டாஸ் போடும் போதே தான் நீண்ட நேரம் நின்று ஆடுவேன் என்றார் ஸ்மித். டாஸ் வென்று யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பெரிய இலக்கு என்ற போதும் தான் திட்டமிட்டபடி நின்று ஆடி முதல் 100 ரன்கள் எடுக்கும் வரை பஞ்சாப் அணியின் திட்டங்களை தவிடுபொடியாக்கினார்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

9வது 2020 ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றது எளிதாக சிக்ஸ் அடிக்கக் கூடிய மைதானத்தில் போட்டி நடந்ததால் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்யும் என்றே கருதப்பட்டது.

ஸ்மித் திட்டம்

ஸ்மித் திட்டம்

ஆனால், ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அடுத்து தான் இந்தப் போட்டியில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வேன் என நம்புவதாகக் கூறினார். அதாவது எத்தனை இலக்கு நிர்ணயம் செய்தாலும் தான் நின்று அடிப்பேன் என்பதையே அப்படி கூறினார் ஸ்மித்.

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அணி எதிர்பார்த்தது போல அதிரடி ஆட்டம் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 106 ரன்கள் குவித்தார். கேஎல் ராகுல் 69, பூரன் 25 ரன்கள் குவித்தனர். பஞ்சாப் அணியை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் திணறியது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் என்ற பெரிய வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ராஜஸ்தான் அணி எப்படியும் தோல்வி அடையும் என்றே பலரும் எண்ணினர்.

ஸ்மித் அதிரடி

ஸ்மித் அதிரடி

ஆனால், துவக்க வீரராக இறங்கிய ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் 4 ரன்னுக்கு அவுட் ஆன போதும், சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார். 7 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார் ஸ்மித்.

கும்ப்ளே கவலை

கும்ப்ளே கவலை

ராஜஸ்தான் அதிரடி ஆட்டம் ஆடும் போது துவக்க ஓவர்களிலேயே விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறலாம் என கணக்கு போட்ட பஞ்சாப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் கவலையுடன் காணப்பட்டார்.

மிரண்ட பஞ்சாப்

மிரண்ட பஞ்சாப்

ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். சாம்சன் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடுவார் என நினைத்த பஞ்சாப் பந்துவீச்சாளர்களை தன் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார் ஸ்மித். அவர் 9வது ஓவரில் ஆட்டமிழக்கும் போது ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டி இருந்தது.

சாம்சன்

சாம்சன்

ஸ்மித் ஆட்டமிழந்த பின் ராகுல் டேவாட்டியா பேட்டிங் வரிசையில் ஏற்றம் கண்டு களமிறங்கினார். அவரால் முதலில் சரியாக பந்துகளை அடித்து ஆட முடியவில்லை. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்த பின் ராகுல் அதிரடி ஆட்டம் ஆடினார்.

ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தான் வெற்றி

ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து போட்டியை மாற்றினார் அவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய சேஸிங் ஆகும்.

Story first published: Sunday, September 27, 2020, 23:36 [IST]
Other articles published on Sep 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+