For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏபிடியின் நம்ப முடியாத அதிரடி.. ஸ்மித் செய்த பெரிய தவறு.. பெங்களூர் அபார வெற்றி!

துபாய் : ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் ஒரு முறை தன் அதிரடியால் மிரட்டி பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 19வது ஓவரில் ஆர்ச்சரை பந்து வீச வைக்காமல் உனட்கட்டுக்கு ஓவர் கொடுத்தார்.

அதுதான் பெரிய தவறாக அமைந்தது. டிவில்லியர்ஸ் 19வது ஓவரிலேயே போட்டியின் திசையை மாற்றினார்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராபின் உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 15, சஞ்சு சாம்சன் 9 ரன்கள் எடுத்தனர். பட்லர் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் ஸ்கோர்

ராஜஸ்தான் ஸ்கோர்

ஸ்டீவ் ஸ்மித் அதிரடி ஆட்டம் ஆடி கடைசி ஓவர் வரை நின்று 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணிக்கு இது சவாலான இலக்காகவே கருதப்பட்டது.

கிறிஸ் மோரிஸ் அபாரம்

கிறிஸ் மோரிஸ் அபாரம்

பெங்களூர் அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பந்துவ் வீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து பெங்களூர் அணி சேஸிங் செய்யத் துவங்கியது.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் அணியில் தேவ்தத் படிக்கல் 35, ஆரோன் பின்ச் 14 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி 32 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். 5 ஓவர்களில் 64 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது பெங்களூர் அணி. அப்போது களத்தில் ஏபி டிவில்லியர்ஸ் - குர்கீரத் சிங் மான் இருந்தனர்.

காப்பாற்றிய டிவில்லியர்ஸ்

காப்பாற்றிய டிவில்லியர்ஸ்

அப்போது டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி அணியை காப்பாற்றினார். 16வது ஓவர் முதல் 18வது ஓவர் வரை ஓவருக்கு 10, 9, 10 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 19வது ஓவரில் ரன் குவித்தால் மட்டுமே வெற்றி பெறலாம் என்ற நிலையில் டிவில்லியர்ஸ் அடித்து ஆட தயாராக இருந்தார்.

19வது ஓவர்

19வது ஓவர்

அப்போது ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 20வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீச வேண்டும் என முடிவு செய்து, 19வது ஓவரை உனட்கட் வசம் அளித்தார். அது தவறான முடிவாக மாறியது. அந்த ஓவரில் டிவில்லியர்ஸ் 3 சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவர் வெற்றி

கடைசி ஓவர் வெற்றி

கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டிவில்லியர்ஸ் 4வது பந்தில் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இருந்தார். பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Saturday, October 17, 2020, 21:03 [IST]
Other articles published on Oct 17, 2020
English summary
IPL 2020 RR vs RCB : AB de Villiers 55 runs helps RCB beat RR
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+