Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செய்த அதே ட்ரிக்.. காப்பி அடித்த ஸ்டீவ் ஸ்மித்.. கோலியின் பிளானை காலி செய்த வீரர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய மாற்றமாக அணியின் துவக்க வீரர் மாற்றப்பட்டார்.

இந்த தொடரில் ஐந்து முறை அணியின் துவக்க வீரரை மாற்றி இருந்தாலும் இந்த முறை அது வேலை செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்கு முன் ஆடிய எட்டு போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

இந்த நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இனி வரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் தவித்து வந்தது அந்த அணி.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அணியை மாற்றாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் ஆர்டரை முற்றிலுமாக மாற்றினார். மிடில் ஆர்டரில் இறங்கி சொதப்பி வந்த ராபின் உத்தப்பாவை துவக்க வீரராக மாற்றினார். பட்லர் இங்கிலாந்து அணியில் ஆடுவது போல மிடில் ஆர்டரில் இறங்கினார்.

உத்தப்பா அதிரடி

உத்தப்பா அதிரடி

இந்த யோசனை ஓரளவு வெற்றி அடைந்தது. ராபின் உத்தப்பா துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடினார். 22 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். 7 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து அசத்தினார். பட்லர் ஐந்தாம் வரிசையில் இறங்கி நிதான ஆட்டம் ஆடி 24 ரன்கள் சேர்த்தார்.

பட்லர் ஆட்டம்

பட்லர் ஆட்டம்

பட்லர் இதுவரை துவக்க வீரராக பெரிதாக ரன் சேர்க்காத நிலையில் மிடில் ஆர்டரில் ரன் சேர்த்தாலும், குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஸ்டீவ் ஸ்மித் மூன்றாம் வரிசையில் இறங்கி சரியாக ரன் எடுக்காமல் தடுமாறி வந்தார். அவரும் தற்போது தன் இடத்தை மாற்றி ஆடினார்.

கோலி திட்டம்

கோலி திட்டம்

ஸ்டீவ் ஸ்மித் நான்காம் வரிசையில் இறங்கி அபாரமாக ரன் குவித்தார். விராட் கோலி துவக்கத்தில் வாஷிங்க்டன் சுந்தரை வைத்து ரன் குவிப்பை தடுப்பார். ஆனால், இந்த முறை உத்தப்பா அப்போது அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்து கோலியின் திட்டத்தை காலி செய்தார்.

தோனி திட்டம் போலவே...

தோனி திட்டம் போலவே...

மிடில் ஓவர்களில் வேகப் பந்துவீச்சை ஸ்டீவ் ஸ்மித் கவனித்துக் கொண்டார். தோனி கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை இதே போலவே மாற்றி இருந்தார். மிடில் ஆர்டரில் ஐந்து அல்லது ஆறாம் இடத்தில் ஆடி வந்த சாம் கர்ரனை துவக்க வீரராக மாற்றினார்.

வெற்றி

வெற்றி

மற்ற பேட்ஸ்மேன்கள் ஒரு வரிசை கீழே இறங்கி ஆடினர். அந்த திட்டம் வெகுவாக வேலை செய்தது. அதே போல, மிடில் ஆர்டர் வீரரை துவக்க வீரராக மாற்றி ஸ்டீவ் ஸ்மித் அந்த திட்டத்தில் தோனி போலவே வெற்றியும் அடைந்துள்ளார்.

Story first published: Saturday, October 17, 2020, 17:43 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+