Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித்.. கோலி எடுத்த முடிவு.. ராஜஸ்தான் - பெங்களூர் மோதல்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பெங்களூர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி ஆகும். அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மோசமான பார்ம் அவுட்டில் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற வீரர்கள் இருந்தும் அந்த அணியால் வெற்றி முடியவில்லை.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்த நிலையில் 33வது லீக் போட்டியில் பெங்களூர் அணியுடன் மோதியது ராஜஸ்தான் அணி. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துபாயில் இந்த போட்டி நடந்தது. ஆடுகளம் டாஸ் முடிவில் முக்கிய பங்கு வகித்தது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

துபாய் ஆடுகளத்தில் இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் நடந்துள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன் காரணமாகவே ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணி மாற்றம்

ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூர் அணியில் இரண்டு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. முகமது சிராஜ், சிவம் துபே நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் குர்கீரத் மான், ஷாபாஸ் அஹ்மது அணியில் சேர்க்கப்பட்டனர்.

Story first published: Saturday, October 17, 2020, 15:50 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+