Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை எதிர்பார்க்கவே இல்லை.. ஷாக் ஆன கோலி.. ஸ்டீவ் ஸ்மித் வைத்த ட்விஸ்ட்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் திட்டம் போட்டு பெங்களூர் அணிக்கு எதிராக ரன் குவித்தது.

கடந்த போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் அணி மோசமான நிலையில் இருந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆடியது.

பெங்களூர் அணியின் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரை மாற்றினார் ஸ்டீவ் ஸ்மித். அவர் கடந்த போட்டிகளில் மோசமாக ஆடி வந்த நிலையில், தற்போது அரைசதம் அடித்தார்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது.

மாற்றம்

மாற்றம்

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் பலவீனமாக இருந்த நிலையில் அதை முற்றிலும் மாற்றி அமைத்தார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ராபின் உத்தப்பா துவக்க வீரராக களமிறங்கினார். பட்லர் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

ஸ்டோக்ஸ் துவக்க வீரராக தொடர்ந்தார். சாம்சான் மூன்றாம் வரிசையில் இறங்கினார். ஸ்டீவ் ஸ்மித் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்த மாற்றத்தால் கடந்த போட்டிகளில் சொதப்பி வந்த ராபின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அபாரமாக ஆடி ரன் குவித்தனர்.

உத்தப்பா அதிரடி

உத்தப்பா அதிரடி

ராபின் உத்தப்பா 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். கோலி பவர்பிளே ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தரை வைத்து எதிரணிகளை அச்சுறுத்தி வந்தார். அதை முறியடித்தார் உத்தப்பா. அடுத்து ஸ்டோக்ஸ் 15, சஞ்சு சாம்சன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஸ்மித் ஆட்டம்

ஸ்மித் ஆட்டம்

ஸ்டீவ் ஸ்மித் அபார ஆட்டம் ஆடினார். பட்லர் நிதான ஆட்டம் ஆடி 25 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்மித் 20வது ஓவர் வரை பேட்டிங் செய்து 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். ராகுல் திவேதியா 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ஸ்கோர்

ராஜஸ்தான் ஸ்கோர்

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணிக்கு துபாய் ஆடுகளத்தில் இந்த இலக்கு சவாலானது. ராஜஸ்தான் 160 ரன்களுக்கு மேல் குவிக்க திட்டமிட்டு, அதை விட கூடுதலாக 177 ரன்கள் வரை குவித்தது.

Story first published: Saturday, October 17, 2020, 18:44 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+