Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப என்ன பண்ணுவீங்க? போட்டியை மாற்றிய அந்த ஓவர்.. முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த வீரர்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் சேஸிங்கில் விக்கெட் இழக்காமல் ஆடி ரன் குவித்த மனிஷ் பாண்டே மற்றும் அவருக்கு ஒத்துழைத்து ஆடி அரைசதம்அடித்த விஜய் ஷங்கர் தான்.

ஆனால், அதற்கு முன்பே ராஜஸ்தான் அணியை அதிக ரன் குவிக்க முடியாமல் தடுத்து போட்டியின் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஜேசன் ஹோல்டர்.

ராஜஸ்தான் பேட்டிங்

ராஜஸ்தான் பேட்டிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் உத்தப்பா, சாம்சன் மட்டுமே ஓரளவு அதிரடி ஆட்டம் ஆடினர். மற்ற டாப் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்கள் நிதானமாக ரன் சேர்த்து வந்தனர்.

கடைசி 5 ஓவர்

கடைசி 5 ஓவர்

கடைசி 5 ஓவர்களில் தான் ராஜஸ்தான் அணி ரன் குவித்தது. அதிலும் சில திருப்பங்கள் இருந்தது. ரியான் பராக் 18வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 ஃபோர் அடித்து மிரட்டினார். அந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 134 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்த 19வது ஓவரிலும் ரன் குவிக்க திட்டமிட்டது அந்த அணி.

19வது ஓவர்

19வது ஓவர்

19வது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். 2016 ஐபிஎல் தொடருக்கு பின் இப்போது தான் ஜேசன் ஹோல்டர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கிறார். இந்த சீசனில் தன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட், 1 ரன் அவுட் செய்திருந்த ஹோல்டர் 19வது ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்,

2 விக்கெட், 7 ரன்

2 விக்கெட், 7 ரன்

19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை சாய்த்த அவர், அடுத்து ஒரு வைடு வீசினார், அதற்கு அடுத்த பந்தில் அதிரடி ஆட்டம் ஆடி வந்த ரியான் பராக் விக்கெட்டை சாய்த்தார். அந்த ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ராஜஸ்தான் ஸ்கோர்

ராஜஸ்தான் ஸ்கோர்

ராஜஸ்தான் அணி 160 - 170 ரன்கள் எடுக்கலாம் என போட்டு வைத்திருந்த திட்டத்தை காலி செய்தார் ஹோல்டர். 20வது ஓவரில் 13 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் என்ற இலக்கு ஹைதராபாத் அணிக்கு எட்டக் கூடிய இலக்காக இருந்தது.

ஹைதராபாத் ஆட்டம்

ஹைதராபாத் ஆட்டம்

அடுத்து ஆடிய ஹைதராபாத் அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி அளித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். அவர் தன் முதல் இரண்டு ஓவர்களில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ விக்கெட்களை சாய்த்தார். 16 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தவித்தது ஹைதராபாத்.

மனிஷ் பாண்டே அசத்தல் ஆட்டம்

மனிஷ் பாண்டே அசத்தல் ஆட்டம்

எனினும், அடுத்து வந்த மனிஷ் பாண்டே - விஜய் ஷங்கர் கடைசி வரை விக்கெட் இழக்காமல் ஆடி சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். விஜய் ஷங்கர் 51 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

Story first published: Friday, October 23, 2020, 16:22 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+