Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2 பேரையும் சமாளிக்க முடியலை.. திணறிய ராஜஸ்தான்.. விக்கெட் அள்ளிய ஹோல்டர்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் திணறியது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி 150 ரன்களை கடந்தது அந்த அணி.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தப் போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணிக்கு ராபின் உத்தப்பா - பென் ஸ்டோக்ஸ் துவக்கம் அளித்தனர். உத்தப்பா அதிரடி ஆட்டம் ஆடினார்.

உத்தப்பா செய்த காரியம்

உத்தப்பா செய்த காரியம்

உத்தப்பா சிறப்பான துவக்கம் அளித்து ஆடி வந்த நிலையில் திடீரென பென் ஸ்டோக்ஸ் பந்தை பிட்ச்சுக்குள் அடித்த போது ரன் ஓட அவசரப்பட்டு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 13 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஸ்டோக்ஸ் சொதப்பல்

ஸ்டோக்ஸ் சொதப்பல்

பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டம் ஆடி சொதப்பினார். 32 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சாம்சன் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 9, ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

விஜய் ஷங்கர், ரஷித் கான்

விஜய் ஷங்கர், ரஷித் கான்

ஹைதராபாத் அணியின் விஜய் ஷங்கர் மற்றும் ரஷித் கான் ஓவர்களில் ரன் குவிக்க முடியாமல் ராஜஸ்தான் வீரர்கள் திணறினர். அவர்கள் இருவரும் ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடைசி ஓவர்கள்

கடைசி ஓவர்கள்

கடைசி ஓவர்களில் தான் ராஜஸ்தான் ரன் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 49 ரன்கள் சேர்த்தது. 18வது ஓவரில் 16 ரன்கள், 20வது ஓவரில் 13 ரன்கள் சேர்த்ததால் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 154 ரன்களை எட்ட முடிந்தது.

பராக், ஆர்ச்சர்

பராக், ஆர்ச்சர்

ரியான் பராக் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஆர்ச்சர் அதிரடியாக ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 7 பந்துகளில் 16 ரன்கள் குவித்து இருந்தார். ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் இந்த சீசனில் தன் முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Thursday, October 22, 2020, 22:04 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+