Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா? ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

முதல் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் அணியை மனிஷ் பாண்டே தன் அதிரடி ஆட்டத்தால் நிலை குலைய வைத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஆன லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

உத்தப்பா ரன் அவுட்

உத்தப்பா ரன் அவுட்

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ராபின் உத்தப்பா 19 ரன்கள் எடுத்த நிலையில் தாமாக முன்வந்து ரன் அவுட்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் படுநிதான ஆட்டம் ஆடி 30 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ராஜஸ்தான் ஸ்கோர்

ராஜஸ்தான் ஸ்கோர்

சாம்சன் 36, பட்லர் 9, ஸ்டீவ் ஸ்மித் 19, ரியான் பராக் 20 ரன்கள் எடுத்தனர். ஆர்ச்சர் கடைசி ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் சேர்க்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. விஜய் ஷங்கர், ரஷித் கான் ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 3, ரஷித் கான் 1, விஜய் ஷங்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஹைதராபாத் அணி சேஸிங் செய்தது.

2 முக்கிய விக்கெட்

2 முக்கிய விக்கெட்

ஆர்ச்சர் துவக்கத்தில் மிரட்டலாக பந்து வீசினார். முதல் ஓவரில் டேவிட் வார்னரை 4 ரன்கள் எடுத்த நிலையிலும், 3வது ஓவரில் பேர்ஸ்டோவை 10 ரன்கள் எடுத்த நிலையிலும் வீழ்த்தினார். அத்துடன் ஹைதராபாத் கதை முடிந்தது என்றே பலரும் எண்ணினர்.

மனிஷ் பாண்டே

மனிஷ் பாண்டே

ஆனால், அதன் பின் மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். விஜய் ஷங்கர் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி 51 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய பின்னும் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தோல்வி அடைந்தது.

Story first published: Thursday, October 22, 2020, 23:38 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+