Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லாத்தானே ஆடினீங்க.. அதுக்குள்ள ஏன் இப்படி? ஓடி வந்த உத்தப்பா.. தடுத்த ஸ்டோக்ஸ்.. பரபர திருப்பம்!

துபாய் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராபின் உத்தப்பா அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடந்த போட்டிகளில் ராபின் உத்தப்பா மிக மோசமாக ஆடி வந்தார். இந்த நிலையில், அவருக்கு விருப்பமான இடத்தில் பேட்டிங் செய்ய வைத்தார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

பின்னடைவு

பின்னடைவு

அதன் பின் நன்றாக பேட்டிங் ஆடி வந்தார் உத்தப்பா. ஹைதராபாத் போட்டியிலும் அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கிய அவர் தன் விக்கெட்டை தானே தாரை வார்த்தார். அவர் விக்கெட்டால் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ராஜஸ்தான் - ஹைதராபாத் போட்டி

ராஜஸ்தான் - ஹைதராபாத் போட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன 40வது ஐபிஎல் லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டிஒயில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணிக்கு பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா துவக்கம் அளித்தனர்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டம் ஆடினார். மறுபுறம் ராபின் உத்தப்பா நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்தார். மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் வேகம் எடுத்தார்.

அவசரப்பட்ட உத்தப்பா

அவசரப்பட்ட உத்தப்பா

அடுத்து நான்காவது ஓவரில் ஸ்டோக்ஸ் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தை ஸ்டோக்ஸ் அடித்தார். ஆனால், பந்து பிட்ச்சை தாண்டி செல்லவில்லை. மறுபுறம் இருந்த ராபின் உத்தப்பா பந்தை கவனிக்காமல் ரன் ஓட அவசரப்பட்டார்.

ரன் அவுட்

ரன் அவுட்

பாதி தூரம் ஓடி வந்தார் உத்தப்பா. பென் ஸ்டோக்ஸ், பந்தை கவனித்து அவரை திருப்பி அனுப்பினார். ஆனால், உத்தப்பா நீண்ட தூரம் வந்ததால் மீண்டும் திரும்ப நேரம் எடுத்துக் கொண்டார். அதற்குள் ஜேசன் ஹோல்டர் பந்தை நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்தார்.

ராஜஸ்தான் சறுக்கல்

ராஜஸ்தான் சறுக்கல்

உத்தப்பா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்ந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகம் உடனடியாக குறைந்தது. ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் அதன் பின் சரிந்தது. சஞ்சு சாம்சன் மட்டுமே ரன் குவித்தார்.

ஸ்டோக்ஸ் நிதானம்

ஸ்டோக்ஸ் நிதானம்

பென் ஸ்டோக்ஸ் படு நிதான ஆட்டம் ஆடினார். 32 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஸ்டோக்ஸ். ராஜஸ்தான் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஸ்மித் அதிரடியாக ஆடினார்.

Story first published: Thursday, October 22, 2020, 21:18 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+