Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவுக்கு மாற்று இவர்தான்.. சீனிவாசன் சொன்ன அந்த இளம் வீரர் ரெடி.. சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

ஷார்ஜா : சிஎஸ்கே அணியில் உற்சாகம் கரை புரண்டு ஓடத் துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி இருந்த இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெயிக்வாட் அதில் இருந்து மீண்டுள்ளார்.

அவரைத் தான் சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக அணியில் ஆட வைப்போம் என சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் கூறி இருந்தார்.

சிஎஸ்கே அணி சிக்கல்

சிஎஸ்கே அணி சிக்கல்

சிஎஸ்கே அணியில் ஐபிஎல் தொடருக்கு முன் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் என இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினர்.

தீபக் சாஹர் மீண்டார்

தீபக் சாஹர் மீண்டார்

இதில் தீபக் சாஹர் மட்டும் ஐபிஎல் தொடர் துவங்க ஒரு வாரம் இருந்த நிலையதில் மீண்டார். பயிற்சியில் பங்கேற்று வந்த அவர் முதல் லீக் போட்டியிலும் ஆடினார். எனினும், இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ந்து தனிமையில் இருந்தார். அவருக்கு பாதிப்பு குறையவில்லை என கூறப்பட்டது.

இளம் வீரர்கள் குறைவு

இளம் வீரர்கள் குறைவு

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே இளம் வீரர்கள் குறைவு என்ற விமர்சனம் உள்ளது. இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட்டும் இல்லாததால் சிஎஸ்கே அணி 22 வயது சாம் கர்ரனை மட்டுமே முதல் போட்டியில் ஆட வைத்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்றது சிஎஸ்கே.

ருதுராஜ் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்

இந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கு முன்னதாக ருதுராஜ் கெயிக்வாட் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் தொடர்ந்து இரண்டு முறை நெகட்டிவ் என முடிவு வந்ததை அடுத்து அவர் சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சீனிவாசன் சொன்ன வீரர்

சீனிவாசன் சொன்ன வீரர்

சுரேஷ் ரெய்னா விலகிய போது கோபம் அடைந்த உரிமையாளர் சீனிவாசன் ரெய்னா இல்லை என்றாலும் எந்த இழப்பும் இல்லை. ருதுராஜ் கெயிக்வாட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறி இருந்தார். அதன் மூலம், சுரேஷ் ரெய்னா இடத்தில் ருதுராஜ் கெயிக்வாட் ஆடுவார் என அப்போதே எதிர்பார்க்கப்பட்டது.

ரெய்னா வர வாய்ப்பே இல்லை

ரெய்னா வர வாய்ப்பே இல்லை

இடையே சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைவார் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால், சிஎஸ்கே அணியும், கேப்டன் தோனியும் ரெய்னா தேவை இல்லை என்ற முடிவில் பிடிவாதமாக உள்ளனர். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

ருதுராஜ் ஆடுவாரா?

ருதுராஜ் ஆடுவாரா?

முதல் போட்டியில் ரெய்னாவுக்கு பதில் முரளி விஜய் அணியில் இடம் பெற்றார். அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு பதில் ருதுராஜ் கெயிக்வாட் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

சிஎஸ்கே அணியின் இரண்டாவது போட்டி செப்டம்பர் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியில் தோனி சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்வாரா? ருதுராஜ் கெயிக்வாட்டை ஆட வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Monday, September 21, 2020, 14:15 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+