இன்னைக்கு ஐபிஎல் அட்டவணையை கண்டிப்பா வெளியிட்டுவிடுவோம்... நம்புங்க
டெல்லி : ஐபிஎல் 2020 தொடர் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை யூஏஇயில் அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெறவுள்ளன.
இதன் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டால் மட்டுமே அடுத்ததாக பல்வேறு பணிகளை திட்டமிட முடியும் என்றும் அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் துபாய் சென்றது முதலே ஐபிஎல் அணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரையில் 53 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்த தொடர் யூஏஇயில் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த 20ம் தேதிவாக்கில் 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் துபாய் சென்றடைந்தனர். தங்களது குவாரன்டைனை முடித்துக்கொண்டு அணி வீரர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக இந்த பயிற்சி ஆட்டங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் துபாய் சென்றது முதலே போட்டிகளின் அட்டவணையை வெளியிட அணி நிர்வாகங்கள் பிசிசிஐயை வலியுறுத்தி வந்தன. கடந்த வெள்ளிக்கிழமை இந்த அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அட்டவணை இன்று வெளியாகும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications