Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-லுக்காக இதை காவு கொடுத்துட்டாங்க.. பிசிசிஐ-யை விளாசிய பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை

கராச்சி : 2020 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தது ஐசிசி. உலகக்கோப்பை நடக்க இருந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Recommended Video

Dhoni மீண்டும் நீக்கப்பட்டார். BCCI Training campல் பெயர் இல்லை

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலர் பிசிசிஐ தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஐபிஎல் தொடரை நடத்த வேண்டி உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவை எடுக்க வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தள்ளி வைப்பு

ஐபிஎல் தள்ளி வைப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் துவங்கவில்லை. லாக்டவுன் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.

பிசிசிஐ முயற்சி

பிசிசிஐ முயற்சி

தற்போது சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்த அனைத்து அணிகளும் முன் வந்துள்ள நிலையில், வேறு தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ-யும் முயன்று வருகிறது. அதற்கு சுமார் 35 - 40 நாட்கள் வேண்டும். அந்த தேதிகளில் வேறு அணிகள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமலும் இருக்க வேண்டும்.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இந்த நிலையில் தான் 2020 டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தேதிகளை அப்படியே ஐபிஎல் தொடருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ திட்டமிட்டது. அதன் மூலம், மற்ற அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்காது.

ஐசிசி தள்ளி வைப்பு

ஐசிசி தள்ளி வைப்பு

பல கூட்டங்களுக்கு பின் ஐசிசி அமைப்பு, 2020 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தது. உடனடியாக அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ தான் டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்க அழுத்தம் கொடுத்துள்ளது என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

பல காரணங்கள் உள்ளது

பல காரணங்கள் உள்ளது

முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறுகையில், ஆசிய கோப்பை தொடர் நிச்சயம் நடத்தி இருக்கலாம். அதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை தள்ளி வைத்ததின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளது என்றார்.

கோபம்

கோபம்

டி20 உலகக்கோப்பை தொடரும் நடந்து இருக்கலாம். ஆனால், நான் முன்பே சொன்னது போல அவர்கள் அதை நடத்த விட மாட்டார்கள். ஐபிஎல்-லுக்கு எந்த சேதமும் வந்துவிடக் கூடாது. ஆனால், உலகக்கோப்பை நரகத்துக்கு கூட செல்லலாம் என கோபமாக விளாசினார் அக்தர்.

ஆஸ்திரேலியா மறுப்பு

ஆஸ்திரேலியா மறுப்பு

2020 உலகக்கோப்பை தொடரை நடத்த இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் தங்களால் பல அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடரை நடத்த முடியாது என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை

சர்ச்சை

அதையும் சுட்டிக் காட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நேர்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார் சோயப் அக்தர். முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் இந்த பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஐசிசி, பிசிசிஐ இதற்கு பதில் அளிக்குமா?

Story first published: Thursday, July 23, 2020, 11:58 [IST]
Other articles published on Jul 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+