Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த சிஎஸ்கே வீரரும், தமிழக வீரரும் மிஸ்ஸிங்.. கங்குலியை இம்பிரஸ் செய்த 6 இளம் வீரர்கள்.. இதோ லிஸ்ட்

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிற்ப்பாக செயல்பட்டனர்.

அவர்களைப் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டிப் பேசினார். அதில் குறிப்பாக சூர்யகுமார் யாதவ்வை அணியில் தேர்வு செய்யாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அவரைப் பற்றியும் பேசினார் கங்குலி.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் தான் இதுவரை இல்லாத அளவு இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பல சர்வதேச, நட்சத்திர வீரர்களை ஓரங்கட்டினர். இந்த ஐபிஎல் சீசனின் ஹைலைட் என்றும் இதைத் தான் கூற வேண்டும். ஒவ்வொரு அணியிலும் இளம் வீரர்கள் ஓரிருவர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜன் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அதே போல, வருண் சக்கரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி கொல்கத்தா அணியில் சிறப்பாக செயல்பட்டனர். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெயிக்வாட், மும்பை அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினர்.

கங்குலி சொன்ன வீரர்கள்

கங்குலி சொன்ன வீரர்கள்

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி தன்னை ஈர்த்த இளம் வீரர்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அவர் சொன்ன அந்த ஆறு இளம் வீரர்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, ஷுப்மன் கில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் மற்றும் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ்.

சூர்யகுமார் நேரம் வரும்

சூர்யகுமார் நேரம் வரும்

சூர்யகுமார் யாதவ் குறித்து தனியாக பேசிய கங்குலி, அவர் நல்ல வீரர் என்றார். அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது விமர்சனத்துக்கு உள்ளானது. அது பற்றி குறிப்பிட்ட கங்குலி, அவருக்கான நேரம் வரும் என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறினார்.

சிஎஸ்கே வீரர் மிஸ்ஸிங்

சிஎஸ்கே வீரர் மிஸ்ஸிங்

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்து இருந்தார். அதே போல, தமிழக வீரர் நடராஜன் குறித்தும் அவர் குறிப்பிடவில்லை. நடராஜன் தன் யார்க்கர் பந்துகளால் சர்வதேச வீரர்களை தடுமாறச் செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 5, 2020, 16:56 [IST]
Other articles published on Nov 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+