Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேன் வில்லியம்சன் நீக்கம்.. ஹைதராபாத் அணி அதிரடி மாற்றம்.. உள்ளே வந்த உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின,

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார்.

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றின் 40வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹைதராபாத் நிலை

ஹைதராபாத் நிலை

ஹைதராபாத் அணி இன்னும் ஒரீரு போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். இந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கடும் அழுத்தத்தில் இருக்கிறார். இதில் மேலும் ஒரு சிக்கலில் இருக்கிறது அந்த அணி.

கேன் வில்லியம்சன் நீக்கம்

கேன் வில்லியம்சன் நீக்கம்

ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர் கேன் வில்லியம்சன் காயத்தால் பாதிக்கப்பட்டார். அவரால் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வேறு வழியின்றி அவரை நீக்கி உள்ளது ஹைதராபாத் அணி. பேட்ஸ்மேன் ஆன அவருக்கு பதில் ஆல் - ரவுண்டர் ஒருவரை அணியில் தேர்வு செய்துள்ளார் வார்னர்.

நம்பர் 1 ஆல்-ரவுண்டர்

நம்பர் 1 ஆல்-ரவுண்டர்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தான் வார்னர் தேர்வு செய்த அந்த ஆல்-ரவுண்டர். டெஸ்ட் போட்டிகளில் உலகின் முன்னணி ஆல் - ரவுண்டரான அவர் டி20 போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடி வருகிறார். அவரை நீண்ட காத்திருப்புக்குப் பின் தேர்வு செய்துள்ளது ஹைதராபாத்.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்தப் போட்டியில் முழு நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Story first published: Thursday, October 22, 2020, 20:03 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+