Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த முடிவை மாற்றிய தோனி.. முதன்முறையாக சிஎஸ்கேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தமிழக வீரர் நீக்கம்

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி முதன்முறையாக முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. கடந்த ஏழு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி சேஸிங் மட்டுமே செய்தது.

ஹைதராபாத் - சென்னை போட்டி

ஹைதராபாத் - சென்னை போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றார். அவர் பேட்டிங் தேர்வு செய்தார். ஒரு மாற்றம் தேவை என்பதால் தான் பேட்டிங் தேர்வு செய்ததாக அவர் கூறினார்.

ஏன் பேட்டிங்?

ஏன் பேட்டிங்?

சிஎஸ்கே அணி கடந்த ஏழு போட்டிகளில் சேஸிங் மட்டுமே செய்து அதில் ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்யவில்லை. தோனி முதலில் டாஸ் வென்ற சில போட்டிகளிலும் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

இனி வரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி ஆகும் எனும் நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே வென்றே ஆக வேண்டும். சிஎஸ்கே பேட்டிங் எடுத்துள்ள நிலையில் சிஎஸ்கே வெற்றி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெகதீசன் நீக்கம்

ஜெகதீசன் நீக்கம்

சிஎஸ்கே அணியில் கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் ஜகதீசன் நீக்கப்பட்டார். அவர் நிதான ஆட்டம் ஆடி பந்துகளை வீணடித்ததாக விமர்சனம் எழுந்தது. கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்பதால் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் பியுஷ் சாவ்லா அணியில் சேர்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி - ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், பியுஷ் சாவ்லா, கரன் சர்மா

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், விஜய் ஷங்கர், ரஷித் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, கலீல் அஹமது, நடராஜன்

Story first published: Wednesday, October 14, 2020, 13:52 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+