For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு மேட்டரா? தோனி சொன்ன அந்த வார்த்தை.. அப்ப கப் நமக்குதான்.. சிஎஸ்கே ரசிகர்கள் செம குஷி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தட்டுத் தடுமாறி வந்தாலும், சில புள்ளி விவரங்கள் அந்த அணியின் ரசிகர்களை உற்சாகமாக வைத்துள்ளது.

2010 ஐபிஎல் தொடரில் நடந்தது போலவே இந்த சீசனிலும் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து தோனியும் ஹைதராபாத் போட்டிக்கு முன் பேசினார்.

அவர் பேசியது மட்டுமின்றி செயலிலும் அதிரடி காட்டினார். அதைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஏழாம் இடத்தில் சிஎஸ்கே

ஏழாம் இடத்தில் சிஎஸ்கே

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தான் ஆடிய முதல் ஏழு போட்டிகளின் முடிவில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணிக்கு கீழே பஞ்சாப் அணி உள்ளது.

பிளே-ஆஃப் கடினம்

பிளே-ஆஃப் கடினம்

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இனி ஆட உள்ள ஏழு போட்டிகளில் ஐந்து அல்லது ஆறு வெற்றிகளை பெற வேண்டும். அதனால், சிஎஸ்கே பிளே-ஆஃப் செல்வதே கடினம் என கருதப்படுகிறது.

அந்த புள்ளி விவரம்

அந்த புள்ளி விவரம்

ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புள்ளி விவரம் வேகமாக பரவி வருகிறது. அதில் சிஎஸ்கே அணி 2010 ஐபிஎல் தொடரில் இதே போன்ற நிலையில் இருந்து, பின் அதில் இருந்து மீண்டு தன் முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே புள்ளிப் பட்டியல்

அதே புள்ளிப் பட்டியல்

2010 ஐபிஎல் தொடரில் முதல் ஏழு போட்டிகளுக்கு பின் சிஎஸ்கே அணி தற்போது உள்ள அதே மாதிரியான புள்ளிப் பட்டியலில் தான் இருந்தது. அப்போதும் ஏழு போட்டிகளில் ஐந்து தோல்விகள் பெற்று, ஏழாம் இடத்தில் இருந்தது சிஎஸ்கே. அந்த அணிக்கு கீழே எட்டாம் இடத்தில் பஞ்சாப் இருந்தது.

மும்பை தான் டாப்

மும்பை தான் டாப்

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் இருந்தது. மேலும், 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூன்றாம் சீசன். 2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணி தடைக்கு பின் ஆடும் மூன்றாவது சீசன். அதே போல, பாதி தொடரின் முடிவில் இரு அணிகள் ஆறு புள்ளிகளுடன் இருந்தன.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

இது போன்ற ஒற்றுமைகள் 2010 மற்றும் 2020 ஐபிஎல் தொடருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி கேப்டன் தோனி, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் டாஸ் நிகழ்வின் போது பேசினார். 2010இன் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அதை மட்டுமே நாங்கள் நம்பி இருக்க முடியாது என்றார்.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

தோனி திடீரென 2010 ஐபிஎல் வெற்றியை பற்றி பேசியது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்தது. இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல, அதற்கு தான் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறேன் என சாம் கர்ரனை ஓபனிங் இறக்கி சொல்லாமல் சொன்னார் தோனி.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

சாம் கர்ரன் துவக்க வீரராக களமிறங்கிய உடனேயே சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் உற்சாகம் கொண்டனர். தோனி நிச்சயம் வெற்றியை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளார் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை கொள்ளத் துவங்கி உள்ளனர்.

Story first published: Tuesday, October 13, 2020, 20:37 [IST]
Other articles published on Oct 13, 2020
English summary
IPL 2020 SRH vs CSK : IPL 2010 repeats for CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+