Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே மாஸ் வெற்றி.. தோனியின் ஆட்டம் ஆரம்பம்.. ஹைதராபாத் மொத்தமாக சரண்டர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதன் முறையாக நடப்பு ஐபிஎல் சீசனில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 167 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறி தோல்வி அடைந்தது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதே இரண்டு அணிகள் சந்தித்த கடந்த லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

 மாற்றம்

மாற்றம்

சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஜெகதீசன் நீக்கப்பட்டு, பியுஷ் சாவ்லா மீண்டும் அணியில் இடம் பெற்றார். துவக்க வீரராக சாம் கர்ரன் களமிறங்கினார். அவர் அதிரடி ஆட்டம் ஆடி 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

பாப் டுபிளெசிஸ் டக் அவுட் ஆனார். அடுத்து வாட்சன் - ராயுடு இணைந்து மத்திய ஒவ்ர்களிழ்க் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு சிஎஸ்கே அணியை ஓவருக்கு 7 ரன்கள் என்ற ரன் ரேட்டில் தக்க வைத்து ஆட்டமிழந்தனர். வாட்சன் 42, ராயுடு 41 ரன்கள் எடுத்து இருந்தனர்

தோனி, ஜடேஜா அதிரடி

தோனி, ஜடேஜா அதிரடி

அடுத்து கடைசி ஓவர்களில் தோனி, ஜடேஜா அதிரடி ஆட்டம் ஆடினர். தோனி 13 பந்துகளில் 21 ரன்களும், ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 167 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் அணிக்கு சவால்

ஹைதராபாத் அணிக்கு சவால்

ஹைதராபாத் அணி சேஸிங்கில் தடுமாறும் என கருதப்பட்டது. அதே போல, சிஎஸ்கே சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது அந்த அணி. வார்னர் 9, மனிஷ் பாண்டே 4, பேர்ஸ்டோ 23 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

வில்லியம்சன் போராட்டம்

வில்லியம்சன் போராட்டம்

கேன் வில்லியம்சன் தனி ஆளாக போராடி 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அவர் 18வது ஓவர் வரை களத்தில் நின்று ஹைதராபாத் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். அவர் ஆட்டமிழந்த பின் ரஷித் கான் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

ஆனாலும், விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணி, கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 1 ரன் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோனி இந்தப் போட்டியில் தன் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Story first published: Wednesday, October 14, 2020, 0:05 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+