Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பேரை நீக்கிய வார்னர்.. பேர்ஸ்டோவும் நீக்கம்.. சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி மாற்றம்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணி தோல்விகளால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ள நிலையில், அணியில் மூன்று மாற்றங்களை செய்துள்ளது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாயில் போட்டி நடைபெற்றது. அங்கே நடந்த முந்தைய போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றதை அடுத்து டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணி நிலை

ஹைதராபாத் அணி நிலை

ஹைதராபாத் அணி 11 லீக் போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. 8 புள்ளிகள் பெற்றுள்ள ஹைதராபாத் அணி இனி ஆடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை வைத்து மட்டுமே பிளே-ஆஃப் செல்ல சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது.

3 மாற்றம்

3 மாற்றம்

இந்த நிலையில், அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. ஜானி பேர்ஸ்டோ, ப்ரியம் கார்க், கலீல் அஹ்மது அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் கேன் வில்லியம்சன், விரிதிமான் சாஹா, நதீம் அணியில் இடம் பெற்றனர்.

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி அணி கடந்த போட்டியில் மோசமாக தோல்வி அடைந்த போதும் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த அணி இந்தப் போட்டியில் வென்றால் தன் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதி செய்து கொள்ள முடியும்.

Story first published: Tuesday, October 27, 2020, 19:48 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+