Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் எடுத்தார்.. இனி முடியாது.. வலியால் துடித்த தமிழக வீரர்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு!

துபாய் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் - ரவுண்டர் விஜய் ஷங்கர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வலியில் துடித்து பாதியில் விலகினார்.

இந்தப் போட்டியில் டெல்லி அணியை புரட்டிப் போட்டு ஹைதராபாத் இமாலய வெற்றி பெற்று இருந்தது.

ஆனாலும், விஜய் ஷங்கரை காயம் காரணமாக இழந்தது ஹைதராபாத் அணி. அவரது ஓவரை டேவிட் வார்னர் வீசி முடித்தார்.

டெல்லி - ஹைதராபாத் போட்டி

டெல்லி - ஹைதராபாத் போட்டி

டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் ரன் குவிப்பது கடினமாகி வருகிறது. ஆனாலும், ஹைதராபாத் அணி வெளுத்து வாங்கியது.

அதிரடி ரன் குவிப்பு

அதிரடி ரன் குவிப்பு

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ட்விட் வார்னர் மற்றும் விரிதிமான் சாஹா அதிரடியில் மிரட்டினர். இருவரும் பவுண்டரி மூலம் எளிதாக ரன்களை குவித்தனர். வார்னர் 66, சாஹா 87 ரன்கள் குவித்தனர்.

டெல்லி சொதப்பல்

டெல்லி சொதப்பல்

டெல்லி அணிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது ஹைதராபாத் அணி. டெல்லி அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து சொதப்பி இருந்தது. அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் அந்த அணி தவித்தது. அப்போது 12வது ஓவரை வீசினார் விஜய் ஷங்கர்.

விஜய் ஷங்கர் ஓவர்

விஜய் ஷங்கர் ஓவர்

அந்த ஓவரின் 3வது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை சாய்த்தார் விச்சை ஷங்கர். அப்போதே டெல்லி அணியின் சேஸிங் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. அந்த ஓவரின் 5வது பந்தை வீசி முடித்த பின் கடைசி பந்துக்கு தயார் ஆனார்.

வலி

வலி

ஆனால், அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவர் நிற்க முடியாமல் கீழே அமர்ந்தார். வலியால் துடித்த அவருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளிக்க வந்தார். பின் விஜய் ஷங்கர் நடக்க முடியாமல் தவித்தார். அத்துடன் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ஹைதராபாத் சோகம்

ஹைதராபாத் சோகம்

ஹைதராபாத் அணியில் இந்த சீசனில் மிட்செல் மார்ஷ், புவனேஸ்வர் குமார், கேன் வில்லியம்சன் என முக்கிய வீரர்கள் காயத்தால் பல போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. விஜய் ஷங்கர் கூட ஒரு போட்டியில் முன்பே இதே போல தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.

வார்னர் வீசிய பந்து

வார்னர் வீசிய பந்து

விஜய் ஷங்கர் விட்டுச் சென்ற 12வது ஓவரின் கடைசி பந்தை அணியின் கேப்டன் டேவிட் வார்னர் வீசினார். முதலில் வைடு வீசிய அவர், பின் சரியாக வீசி 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஹைதராபாத் அணி இந்தப் போட்டியின் முடிவில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, October 28, 2020, 0:47 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+