Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒருத்தர் தேவையே இல்லை வீட்டுக்கு அனுப்புங்க.. அதிரடி வீரர் செய்த காரியம்.. ரசிகர்கள் விளாசல்

அபுதாபி : 2019 ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

ரஸ்ஸல் களத்தில் நின்றாலே சிக்ஸர் தான் என்ற அளவுக்கு அப்போது அவர் அட்டகாசமாக ஆடி வந்தார்.

ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறார். எட்டு இன்னிங்க்ஸ்களில் வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஆண்ட்ரே ரஸ்ஸல்.

ஆண்ட்ரே ரஸ்ஸல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல். டி20 ஆல்-ரவுண்டரான அவர் உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்களில் தொடர்ந்து ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ளார்.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரிலும் முக்கிய வீரராக கருதப்பட்டார். அவர் இல்லாத கொல்கத்தா அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலை நீடித்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போல ரஸ்ஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

2019 சீசனில் 510 ரன்கள் குவித்து இருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.81 ஆகும். ஆனால், நடப்பு சீசனில் எட்டு இன்னிங்க்ஸ்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 11.85 மட்டுமே. ஒரு முறை மட்டுமே 20 ரன்களை தாண்டி ரன் குவித்துள்ளார்.

சொதப்பல்

சொதப்பல்

இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமாக செயல்பட்டார். ஒரு சில போட்டிகளில் பந்துவீச்சிலாவது அணிக்கு கை கொடுத்த அவர், இந்த முறை அதிலும் சொதப்பினார். பேட்டிங்கில் நான்காம் வரிசையில் இறங்கியும் அவர் 11 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

போட்டி டை

போட்டி டை

பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 29 ரன்கள் வாரி இறைத்தார். அதன் காரணமாகவே ஹைதராபாத் அணி போட்டியை டை செய்தது. அப்படி டை செய்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றதால் ரஸ்ஸல் தப்பித்தார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஆனாலும், இந்தப் போட்டியின் முடிவில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மீது கொல்கத்தா அணி ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் பேட்டிங்கில் இதுவரை ஒரு போட்டியில் கூட அணிக்கு கை கொடுக்காத நிலையில், இன்னும் அவரை அணியில் வைத்திருப்பதால் என்ன பயன் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Sunday, October 18, 2020, 23:44 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+