Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வீரரை நம்பி ஏமாந்த மார்கன்.. தினேஷ் கார்த்திக் வைத்த ட்விஸ்ட்.. தரமான சம்பவம்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் தடுமாறியது.

அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்-ஐ நம்பி நான்காம் வரிசையில் இறக்கினார் புதிய கேப்டன் இயான் மார்கன்.

ஆனால், ரஸ்ஸல் அணியை கைவிட்டார். இயான் மார்கனும் ரன் குவிக்க முடியாமல் திணறினார். அப்போது வந்த முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் போட்டியில் ட்விஸ்ட் வைத்து மாற்றினார்.

டாஸ் வென்ற வார்னர்

டாஸ் வென்ற வார்னர்

2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதிய லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றார். அவர் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் விக்கெட்டை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் நிதான ஆட்டம் ஆடினார்.

ஏமாற்றிய ரஸ்ஸல்

ஏமாற்றிய ரஸ்ஸல்

நிதிஷ் ராணா வழக்கம் போல அதிரடி ஆட்டம் ஆடி 20 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஆண்ட்ரே ரஸ்ஸல் நான்காம் வரிசையில் இறங்கினார். அவர் இந்த தொடரில் இதுவரை பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்காத நிலையில் இந்த முறையும் ஏமாற்றினார்.

தவித்த மார்கன்

தவித்த மார்கன்

ரஸ்ஸல் 11 பந்துகளில் 9 ரன்ம்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் இயான் மார்கன் நிதானமாக ஆடி ரன் எடுக்க முடியாமல் தவித்து வந்தார். கொல்கத்தா அணி 140 - 150 ரன்களை தாண்டுமா? என்பதே சந்தேகமாக இருந்தது.

தினேஷ் கார்த்திக் அதிரடி

தினேஷ் கார்த்திக் அதிரடி

அப்போது ஆறாவது பேட்ஸ்மேன் ஆக தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார், அவர் அணியில் நிலையை உணர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார். கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணி அதிரடியாக ரன் குவித்தது. அந்த 4 ஓவர்களில் மட்டும் 52 ரன்கள் குவித்தது.

எகிறிய ஸ்ட்ரைக் ரேட்

எகிறிய ஸ்ட்ரைக் ரேட்

தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். 2 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200-ஐ தாண்டியது. இயான் மார்கனும் கடைசி ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. ஹைதரபாத் அணியின் பந்துவீச்சு கடைசி ஓவர்களில் மோசமாக அமைந்தது.

சந்தீப் சர்மா, ஷங்கர் அபாரம்

சந்தீப் சர்மா, ஷங்கர் அபாரம்

ஹைதராபாத் பந்துவீச்சில் விஜய் ஷங்கர் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கட்டுக் கோப்பாக பந்து வீசினார். சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 27 ரன்களும், ரஷித் கான் 28 ரன்களும் கொடுத்தனர். நடராஜன் 2, பேசில் தம்பி 1, விஜய் ஷங்கர் 1, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Sunday, October 18, 2020, 18:42 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+