Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இது? நீள முடி.. செம ஸ்டைலாக தெறிக்கவிட்ட அம்பயர்.. டிரென்டிங் ஆன “மைக்கேல் ஜாக்சன்”!

அபுதாபி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அம்பயராக செயல்பட்ட பாஷிம் பதக் ரசிகர்களை கவர்ந்தார்.

அவரது நீளமான முடி, வித்தியாசமான நடை மற்றும் பாவனைகளால் களத்தில் அனைவரையும் ஈர்த்தார். ரசிகர்கள் அவரை கிரிக்கெட்டின் மைக்கேல் ஜாக்சன் என கிண்டல் செய்து வருகின்றனர்.

அவர் குறித்து தேடிய போது இன்னும் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன. அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதே போல கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஹைதராபாத் - கொல்கத்தா போட்டி

ஹைதராபாத் - கொல்கத்தா போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன 35வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீசியது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடின.

யாருப்பா இது?

யாருப்பா இது?

இந்த பரபரப்பான போட்டிக்கு இடையே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஒரு அம்பயர். நீளமான முடியுடன், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வித்தியாசமாக காட்சி அளித்தார். அவரது செயல்பாடும், நின்ற பாணியும் கூட வித்தியாசமாக இருந்தது.

பாஷிம் பதக்

பாஷிம் பதக்

அந்த அம்பயர் பெயர் பாஷிம் பதக். மும்பையை சேர்ந்த அவர் பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அம்பயராக பணியாற்றி உள்ளார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் அம்பயராக செயல்பட தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஹைதராபாத் - கொல்கத்தா போட்டியில் அவர் களத்துக்கு வந்தது முதல் கவனம் ஈர்த்தார்.

ஹெல்மட்

ஹெல்மட்

அவர் இப்போது மட்டும் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் உள்ளூர் போட்டிகளில் ஹெல்மட் அணிந்து அம்பயர் பணியை செய்தார். அப்போது அது குறித்து பரபரப்பு ஏற்பட்டது. களத்தில் வீரர்கள், அம்பயர்கள் காயம் அடைவது, உயிரிழப்பது குறித்து சுட்டிக் காட்டினார் அவர்.

சிரித்து மகிழ்ந்த ரசிகர்கள்

சிரித்து மகிழ்ந்த ரசிகர்கள்

எது எப்படியோ போட்டி சுவாரசியத்தை தாண்டி ரசிகர்களை குஷியாக்கினார் பாஷிம் பதக். இணையத்தில் ரசிகர்கள் அவரது உடல்மொழி, நீளமான முடி ஆகியவற்றை கிண்டல் செய்து மகிழ்ந்தனர். அவர் மைக்கேல் ஜாக்சன் போல இருப்பதாகவும் சிலர் கூறினர்.

Story first published: Sunday, October 18, 2020, 17:08 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+