Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த வீரரும் செய்யாத.. நம்ப முடியாத சாதனை.. தெறிக்கவிட்ட வார்னர்.. வாயை பிளந்த ரசிகர்கள்!

துபாய் : டேவிட் வார்னர் மிரட்டலான சாதனை ஒன்றை செய்துள்ளார்.

ஐபிஎல் அரங்கில் 50க்கும் மேற்பட்ட 50+ ஸ்கோர் அடித்து பெரும் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை செய்யும் முதல் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். அவர் அளவுக்கு இத்தனை வேகமாக வேறு எந்த வீரராலும் இந்த சாதனையை செய்ய முடியாது.

பஞ்சாப் போட்டி

பஞ்சாப் போட்டி

ஹைதராபாத் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு பெரிய அளவில் துவக்கம் அளித்தது டேவிட் வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி.

ஒத்துழைப்பு அளித்து ஆடினார்

ஒத்துழைப்பு அளித்து ஆடினார்

ஜானி பேர்ஸ்டோ 97 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வார்னர் நிதான ஆட்டம் ஆடி பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார். பவர்பிளே ஓவர்களில் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 40 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.

ஐம்பதாவது 50+ ஸ்கோர்

ஐம்பதாவது 50+ ஸ்கோர்

இது ஐபிஎல் தொடரில் அவரின் ஐம்பதாவது 50+ ஸ்கோர் ஆகும். வார்னர் ஐபிஎல் தொடரில் 46 அரைசதமும், 4 சதமும் அடித்துள்ளார். ஐபிஎல் அரங்கில் ரன் மெஷினாக வலம் வரும் வார்னர் ஐம்பது 50+ ஸ்கோர் அடித்து அதிர வைத்துள்ளார்.

கடந்த சீசன்

கடந்த சீசன்

கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணி கோப்பை வெல்லாவிட்டாலும், வார்னர் 12 போட்டிகளில் 692 ரன்கள் குவித்தார். அதன் பேட்டிங் சராசரி 69.20 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 143.86 ஆகும். கடந்த சீசனில் ஆரஞ்ச் தொப்பியை வார்னர் கைப்பற்றி இருந்தார்.

ஒன்பது முறை

ஒன்பது முறை

தொடர்ந்து சிறப்பாக ஆடுவதில் வார்னரை முந்த யாராலும் முடியாது. வார்னர் 132 இன்னிங்க்ஸ்களில் ஐம்பது முறை 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ந்து ஒன்பது முறை 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார்.

விராட் கோலி

விராட் கோலி

வார்னருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அவர் 174 இன்னிங்க்ஸ்களில் 42 முறை 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் ரோஹித் சர்மா - சுரேஷ் ரெய்னா உள்ளனர். அவர்கள் 39 முறை 50+ ஸ்கோர் எடுத்துள்ளனர்.

முதல் இடத்தில்..

முதல் இடத்தில்..

இவர்களில் மிகக் குறைந்த இன்னிங்க்ஸ்களில் அதிக 50+ ஸ்கோர் எடுத்துள்ளார் வார்னர். இதன் மூலம் ஐபிஎல் அரங்கின் சிறந்த பேட்ஸ்மேன் என நிரூபித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் வார்னர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 8, 2020, 23:24 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+