Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈவு இரக்கமே இல்லாமல் அடித்த பேர்ஸ்டோ.. மிரண்டு போன பஞ்சாப்.. கடைசியில் அந்த ட்விஸ்ட்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ தாண்டவம் ஆடினார்.

பவுண்டரி மழை பொழிந்த அவர் பஞ்சாப் அணியை மிரள வைத்தார். அவர் களத்தில் இருக்கும் வரை ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து வந்தது ஹைதராபாத். சதத்தை நெருங்கிய அவர் கடைசியில் ஏமாற்றினார்.

ஹைதராபாத் - பஞ்சாப் போட்டி

ஹைதராபாத் - பஞ்சாப் போட்டி

2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ அதிரடி துவக்கம் அளித்தனர். இருவருமே பவர்பிளே ஓவர்களில் பவுண்டரி அடித்து மிரட்டினர். பவர்பிளே முடிந்த பின்னும் பேர்ஸ்டோ அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அப்போது வார்னர் சற்று நிதான ஆட்டம் ஆடினார்.

விக்கெட் வீழ்த்தவே முடியவில்லை

விக்கெட் வீழ்த்தவே முடியவில்லை

பஞ்சாப் அணியால் இந்த ஜோடியை பிரிக்கவே முடியவில்லை. 10 ஓவர்களை கடந்தும் வார்னர் - பேர்ஸ்டோ ரன் குவித்து வந்தனர். பேர்ஸ்டோ வார்னரை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வந்தார். பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி ஏமாற்றம் அடைந்தார்.

பேர்ஸ்டோ மூன்றாவது அரைசதம்

பேர்ஸ்டோ மூன்றாவது அரைசதம்

ஜானி பேர்ஸ்டோ 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது இந்த சீசனில் அவரது மூன்றாவது அரைசதம் ஆகும். முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிராக 61 ரன்களும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 53 ரன்களும் அடித்து இருந்தார்.

பறிபோன சதம்

பறிபோன சதம்

அடுத்து சதத்தை நெருங்கினார் பேர்ஸ்டோ 90 ரன்களை எட்டிய பின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. வார்னர் 16 ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நான்காவது பந்தில் பேர்ஸ்டோ 97 ரன்களில் ஆட்டமிழந்தார். 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார் பேர்ஸ்டோ. அவர் 7 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து இருந்தார்.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

வார்னர் - பேர்ஸ்டோ வெளியேறிய பின் ஹைதராபாத் அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. எப்படியோ தட்டுத் தடுமாறி 20 ஓவர்களில் 201 ரன்களை எட்டியது. தடுமாற்றம் இல்லாமல் ஆடி இருந்தால் அந்த அணி 220 ரன்களை கூட எட்டி இருக்கக் கூடும்.

Story first published: Thursday, October 8, 2020, 22:15 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+