For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகா மோசமான ரெக்கார்டு.. அவமானத்தை சந்தித்த பஞ்சாப்.. அனில் கும்ப்ளே இருந்தும் இப்படியா?

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இரண்டு போட்டிகளாக தவித்து மோசமான ரெக்கார்டை செய்துள்ளது.

அனில் கும்ப்ளே அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தும் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு இன்னிங்க்ஸ் முழுவதும் விக்கெட் எடுக்கவில்லை பஞ்சாப் அணி. ஹைதராபாத் அணியிலும் முதல் விக்கெட் எடுக்க 15 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

பஞ்சாப் அணி நிலை

பஞ்சாப் அணி நிலை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2020 ஐபிஎல் சீசனில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கியது.

அணியை மாற்றும் கும்ப்ளே

அணியை மாற்றும் கும்ப்ளே

பஞ்சாப் அணி வெற்றி பெறாத நிலையில், போட்டிக்கு போட்டி அணியில் சில வீரர்களை மாற்றிக் கொண்டே வருகிறார் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே. ஆனாலும், சரியான 11 வீரர்களை அந்த அணியால் அடையாளம் காண முடியவில்லை.

சிஎஸ்கே போட்டி

சிஎஸ்கே போட்டி

அந்த அணியின் ஐந்தாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடியது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் விக்கெட்டை கடைசி வரை பஞ்சாப் அணியால் வீழ்த்த முடியவில்லை.

ஹைதராபாத் போட்டி

ஹைதராபாத் போட்டி

அடுத்து ஆடிய ஹைதராபாத் போட்டியில் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் - பேர்ஸ்டோ விக்கெட்டை 15வது ஓவர் வரை பஞ்சாப் அணியால் வீழ்த்த முடியவில்லை. 15.1 ஓவரில் தான் வார்னர் விக்கெட்டை வீழ்த்தியது பஞ்சாப், 15வது ஓவருக்கு பின் 7 பந்துகளில் 3 விக்கெட்களை வீழ்த்தியது.

36 ஓவர்கள்

36 ஓவர்கள்

ஆனாலும், சுமார் 36 ஓவர்களுக்கு 1 விக்கெட் கூட வீழ்த்தாத ஐபிஎல் அணி என்ற மோசமான சாதனையை செய்து அவமானத்தை சந்தித்தது பஞ்சாப். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 16.1 ஓவரில் விக்கெட் வீழ்த்திய பஞ்சாப் அணி, அதன் பின் சிஎஸ்கே அணிக்கு எதிராக 17.4 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்கவில்லை. அடுத்து ஹைதராபாத் போட்டியில் 15 ஓவர்களுக்கு விக்கெட் வீழ்த்தவில்லை.

மோசமான நிலை

மோசமான நிலை

பஞ்சாப் அணி 2020 ஐபிஎல் தொடரில் கடந்த சீசனை விட மோசமான நிலையில் உள்ளது. கடந்த சீசனில் அஸ்வின் தலைமையில் முதல் பாதியில் வெற்றிகள் குவித்து, இரண்டாம் பாதியில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது பஞ்சாப்.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. 16வது ஓவர் முதல் பஞ்சாப் அணி சிறப்பாக பந்து வீசியது. அந்த ஐந்து ஓவர்களில் மட்டும் 6 விக்கெட்கள் வீழ்த்தியது. பஞ்சாப் அணி சவாலான இலக்கை சந்தித்தது.

Story first published: Thursday, October 8, 2020, 22:52 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
IPL News in Tamil : SRH vs KXIP : KXIP Punjab wicketless run for 38.5 overs, despite Anil Kumble as coach.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+