இவரால் மட்டும் தான் முடியும்.. டி20 மேட்ச்சில் டபுள் விக்கெட் மெய்டன்.. சரண்டரான பஞ்சாப்!
துபாய் : பஞ்சாப் அணியை புரட்டிப் போட்டு மாபெரும் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முக்கிய காரணமாக விளங்கினார் ரஷித் கான்.
அவரது ஓவர்களில் ஒரு பேட்ஸ்மேனால் கூட பவுண்டரி அடிக்க முடியவில்லை. மேலும், 2 விக்கெட்களை வீழ்த்தி மெய்டன் ஓவரும் வீசினார் ரஷித்.

வார்னர் - பேர்ஸ்டோ அதிரடி
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம் ஆடினர். பேர்ஸ்டோ 97 ரன்கள் குவித்தார். வார்னர் 52 ரன்கள் சேர்த்தார்.

பெரிய இலக்கு
ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து சரணடைந்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் ரஷித் கான் மிக சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

ரஷித் கான்
ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். இதில் அவரது கடைசி ஓவரில் அவர் அதிரடி ஆட்டம் ஆடி தனி ஆளாக பஞ்சாப் அணியை கரை சேர்க்க முயன்ற நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை சாய்த்தார்.

விக்கெட் மெய்டன்
அடுத்து பந்தில் முகமது ஷமி விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் ரன்னே கொடுக்காமல் இரண்டு விக்கெட் வீழ்த்தி, டபுள் விக்கெட் மெய்டன் வீசி இருந்தார் ரஷித் கான். டி20 போட்டிகளில் அவரைக் கண்டு அனைத்து பேட்ஸ்மேன்களும் அஞ்சி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications