Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேர்ஸ்டோ 97 ரன்.. மிரள வைத்த ரஷித் கான்.. பஞ்சாப்பை ஓட ஓட விரட்டி வீழ்த்திய ஹைதராபாத்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சொதப்பலாக பந்து வீசியது.

16வது ஓவர் வரை அந்த அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. வார்னர் 52, பேர்ஸ்டோ 97 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை திணற வைத்தனர். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் - பஞ்சாப் போட்டி

ஹைதராபாத் - பஞ்சாப் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றின் 22 வது போட்டியில் ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் சித்தார்த் கவுலுக்கு பதில் கலீல் அஹ்மது சேர்க்கப்பட்டார்.

பஞ்சாப் அணி மாற்றம்

பஞ்சாப் அணி மாற்றம்

பஞ்சாப் அணி அதிரடியாக மூன்று மாற்றங்களை செய்தது. ஹர்ப்ரீத் பிரார், கிறிஸ் ஜோர்டான், சர்ப்ராஸ் கான் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனாலும், அதனால் அந்த அணிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.

வார்னர் - பேர்ஸ்டோ

வார்னர் - பேர்ஸ்டோ

ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ இணைந்து அதிரடி துவக்கம் அளித்தனர். வார்னர் 52, பேர்ஸ்டோ 97 ரன்கள் குவித்தனர். இருவரும் 16வது ஓவரில் தான் ஆட்டமிழந்தனர். அதுவரை பஞ்சாப் அணி விக்கெட் எடுக்க முடியாமல் தவித்தது.

சறுக்கல்

சறுக்கல்

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் ஹைதராபாத் அணி சறுக்கியது. கடைசி 5 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எனினும், 20 ஓவர்களில் 201 ரன்களை கடந்திருந்தது ஹைதராபாத் அணி. பஞ்சாப் அணிக்கு இதுவே சவாலான இலக்காக இருந்தது.

பந்துவீச்சு மோசம்

பந்துவீச்சு மோசம்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது. கடைசி ஐந்து ஓவரில் ஆதிக்கம் செலுத்தினாலும், அனைத்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர். 202 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் பஞ்சாப் சேஸிங் செய்ய வந்தது.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

பந்துவீச்சைப் போலவே, பேட்டிங்கிலும் சொதப்பியது பஞ்சாப். ராகுல் 11, மயங்க் அகர்வால் 9. சிம்ரன் சிங் 11, மேக்ஸ்வெல் 7, மந்தீப் சிங் 6, முஜீப் உர் ரஹ்மான் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இப்படி மோசமாக விக்கெட் வீழ்ந்து கொண்டிருந்த போது ஒரு பேட்ஸ்மேன் மட்டும் அதிரடியில் ஹைதராபாத் அணியை தெறிக்க விட்டார்.

பூரன் போராட்டம்

பூரன் போராட்டம்

நிக்கோலஸ் பூரன் தான் அந்த அதிரடி மன்னன். 37 பந்துகளில் 77 ரன்கள் குவித்த அவர் 5 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து தன் அணியை கரை சேர்க்க போராடினார். ஆனால், அவர் ரஷித் கான் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

ரஷித் கான் மிரட்டல்

ரஷித் கான் மிரட்டல்

ரஷித் கான் இந்தப் போட்டியில் மிரட்டலாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். விக்கெட் மெய்டன் ஓவரும் வீசி அசத்தினார். பஞ்சாப் அணியின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் ஷமி, கோட்ரேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

பஞ்சாப் அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிய வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் 6 போட்டிகளில் 5 தோல்விகளை பெற்று மோசமான நிலைக்கு சென்றது.

Story first published: Friday, October 9, 2020, 0:09 [IST]
Other articles published on Oct 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+