Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த டீம் தான் ஐபிஎல் கப் ஜெயிக்கும்.. வைரல் ட்வீட்.. ரசிகர்களை மிரள வைத்த பதிவு!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் இந்த அணி தான் கோப்பை வெல்லும் என ஒருவர் செய்துள்ள கணிப்பு வைரல் ஆகி வருகிறது.

அந்த பதிவில் ஐபிஎல் கோப்பை வெல்லப் போகும் அணி மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் என்ன நடக்கும் என தொடருக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.

அதன்படியே அனைத்தும் கடந்துள்ளது. அதன் படி, அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போல தான் ஐபிஎல் இறுதிப் போட்டி வெற்றியும் அமையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் அணிகள் முன்னேறி உள்ளன. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லவில்லை. இது எல்லாவற்றையும் சரியாக கணித்துள்ளார் மிதுல் என்ற அந்த ரசிகர்.

அந்த பதிவு

ஜூலை 27 அன்றே இதை கணித்துள்ளார். 2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று தான் துவங்கியது. கிட்டத்தட்ட ஐபிஎல் துவங்க இரு மாதங்களுக்கு முன்பே அவர் ஐபிஎல் தொடரில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைத்துள்ளார்.

கோலி ஆட்டம்

கோலி ஆட்டம்

அவர் முதலில் விராட் கோலி ஆட்டம் சுமாராக இருக்கும் என்பதில் இருந்து தன் கணிப்பை துவங்கி உள்ளார். அது அப்படியே நடந்துள்ளது. இந்த சீசனில் கோலி ரன் குவித்தாலும் அவரது ஆட்டம் மந்தமாக இருந்தது. அவரை விட பெங்களூர் அணியில் படிக்கல் அதிக ரன் குவித்து இருந்தார்.

பஞ்சாப் போகாது

பஞ்சாப் போகாது

அடுத்து சிஎஸ்கே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என சரியாக கணித்துள்ளார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பெறும் என அப்படியே கூறி இருப்பதுதான் இதில் நம்ப முடியாத விஷயம்.

கோப்பை யாருக்கு?

கோப்பை யாருக்கு?

அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் கோப்பை வெல்லும் என கூறி உள்ளார். உண்மையில், ஹைதராபாத் அணி கடைசி மூன்று போட்டிகளில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ள மற்ற மூன்று அணிகளை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி உளது. அதனால், கோப்பை வெல்லவும் அதிக வாய்ப்பு உள்ளது.

வியப்பு

வியப்பு

இந்த சரியான கணிப்புகளால் ரசிகர்கள் வியந்து போய் உள்ளனர். ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டும் சரியாக இருந்தால் கூட இது ஆச்சரியத்தை அளித்து இருக்காது. ஆனால், சொன்னது எல்லாமே நடந்திருப்பதால் எப்படியும் ஹைதராபாத் அணியும் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, November 4, 2020, 2:07 [IST]
Other articles published on Nov 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+