Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்தா.. ஸ்டைலா.. மும்பை இந்தியன்ஸ் அணியை முடித்த வார்னர் - சாஹா.. நேரா பிளே-ஆஃப் தான்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த கெத்தான வெற்றி மூலம் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப்சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இடம் பெறாததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை தடுமாற்றம்

மும்பை தடுமாற்றம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டி காக் 25, சூர்யகுமார் யாதவ் 36, இஷான் கிஷன் 33 ரன்கள் எடுத்தனர். அடுத்து க்ருனால் பாண்டியா டக் அவுட் ஆனார். சௌரப் திவாரி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இலக்கு

இலக்கு

பொல்லார்டு கடைசி நேரத்தில் விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அதிரடி ஆட்டம் ஆடி 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாதது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத் ஜோடி

ஹைதராபாத் ஜோடி

150 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தது டேவிட் வார்னர் - விரிதிமான் சாஹா ஜோடி. இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 17.1 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர்.

இமாலய வெற்றி

இமாலய வெற்றி

வார்னர் 58 பந்துகளில் 85 ரன்களும், விரிதிமான் சாஹா 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இருந்தனர். ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணி மட்டுமே ஒரே தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று, தோல்வியும் அடைந்துள்ளது,

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

இந்த இமாலய வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுடன், ஹைதராபாத் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்க உள்ளது.

Story first published: Tuesday, November 3, 2020, 23:30 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+