Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2 அடுத்தடுத்த சிக்ஸ்.. அய்யோ ஏபிடி! இதுக்குத்தானே ஆசைப்பட்டோம்.. செம குஷியான ரசிகர்கள்!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட இரண்டில் ஒரு விஷயம் அப்படியே நடந்தது.

ஏபி டிவில்லியர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சை புரட்டி எடுத்து ரன் அரைசதம் அடித்தார்.

அவரது அதிரடியால் ஹைதராபாத் அணி கடைசி ஓவர்களில் ரன் ரேட்டை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.

சிறப்பான துவக்கம்

சிறப்பான துவக்கம்

2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தங்களின் முதல் லீக் போட்டியில் மோதின. இதில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கம் அளித்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். பின் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் இணைந்து பேட்டிங் செய்ய வந்தனர்.

கோலி - டிவில்லியர்ஸ்

கோலி - டிவில்லியர்ஸ்

பெங்களூர் ரசிகர்கள் கோலி - டிவில்லியர்ஸ் இருவரும் சேர்ந்து கடந்த காலங்களில் எதிரணியை துவம்சம் செய்தது போல இப்போதும் ஆடப் போகிறார்கள் என உற்சாகம் அடைந்தனர். ஆனால், விராட் கோலி மட்டும் ஏமாற்றம் அளித்தார்.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கோலி. அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. தமிழக வீரர் நடராஜன் விரித்த வலையில் அவர் வீழ்ந்தார். எனினும், ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவரது பேட்டிங்கில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் அவர் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

இரண்டு சிக்ஸர்கள்

இரண்டு சிக்ஸர்கள்

19வது ஓவரில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் ஏபி டிவில்லியர்ஸ். அத்துடன் பெங்களூர் அணிக்காக மட்டுமே 200 சிக்ஸர்கள் அடித்து புதிய மைல்கல் சாதனை படைத்தார். அவர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.

பெங்களூர் அணி வெற்றி

பெங்களூர் அணி வெற்றி

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, September 22, 2020, 16:32 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+