Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டம்ப்பில் பட்ட பந்து.. ஆனாலும் அவுட் இல்லை.. ராகுலுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உறைந்து போன பேர்ஸ்டோ!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டியில் நம்ப முடியாத காட்சி அரங்கேறியது.

ராகுல் திவேதியா அதிரடியாக பேட்டிங் செய்து இலக்கை நெருங்கிக் கொண்டு இருந்த போது பந்து ஸ்டம்ப்பில் பட்டது.

ஆனாலும், அது அவுட் இல்லை என தீர்ப்பு வந்தது. மேலும், அதே நேரத்தில் கேட்ச் மற்றும் ஸ்டம்ப்பிங்கும் செய்ய முடியாமல் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஏமாந்து போனார். இப்படி ஒரே நேரத்தில் எல்லாமே சொதப்பலாக மாறி ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

லீக் போட்டி

லீக் போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது. அடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் சிக்கல்

ராஜஸ்தான் சிக்கல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஐந்து பேரும் 12வது ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது ரியான் பராக், ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்து அந்த அணியை மீட்டனர்.

அந்த வாய்ப்பு

அந்த வாய்ப்பு

கடைசி ஐந்து ஓவர்களில் குறி வைத்து ரன் குவித்து வந்த ஜோடி வேகமாக இலக்கை நெருங்கி வந்தது. அப்போது 18வது ஓவரில் ராகுல் திவேதியாவை அவுட் ஆக்க வாய்ப்பு கிடைத்தது. ரஷித் கான் வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொள்ள கிரீஸை விட்டு இறங்கி வந்தார்.

பவுல்டு அவுட்?

பவுல்டு அவுட்?

ஆனால், பந்தை தவறவிட்டார். பந்து நேராக விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் முட்டிக்கு கீழே சென்றது. அவர் கேட்ச் பிடிக்க தயாரானார். இடையே பந்து ஸ்டம்ப்பில் பட்டது. பவுல்டு அவுட் என அனைவரும் ஒரு கணம் நினைத்த போது, பெயில்ஸ் வெளியே வரவில்லை.

அவுட் இல்லை

அவுட் இல்லை

ஸ்டம்ப்பிலேயே பெயில்ஸ் இருந்ததை அடுத்து அது அவுட் இல்லை என அம்பயர் கூறினார். அந்த பந்து ஒருவேளை ஸ்டம்ப்பில் படாமல் சென்றிருந்தால் பேர்ஸ்டோ எளிதாக கேட்ச் பிடித்து இருப்பார் அல்லது ஸ்டம்ப்பிங் செய்து இருப்பார்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

அந்த இரண்டு வாய்ப்புகளும் பறிபோனது. அதுமட்டுமின்றி பந்து ஸ்டம்ப்பில் முழுமையாக பட்டும் பெயில்ஸ் மேலே வராமல் இருந்ததால் பவுல்டு அவுட்டில் இருந்தும் தப்பினார் திவேதியா. அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்ததால் அவர் தப்பினார்.

ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தான் வெற்றி

இந்தப் போட்டியில் திவேதியா 45 ரன்கள் எடுத்தும், பராக் 42 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தனர். திவேதியா விக்கெட் வீழ்ந்திருந்தால் நிலைமை ஹைதராபாத் அணிக்கு சாதகமாக மாறி இருக்கும்.

Story first published: Wednesday, October 14, 2020, 21:08 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+