Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 வீரர்கள் நீக்கம்.. உள்ளே வந்த பென் ஸ்டோக்ஸ்.. அதிர வைத்த ராஜஸ்தான்.. ஹைதராபாத் டாஸ் வெற்றி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு போட்டிகளில் ஆடி அதில் நான்கு தோல்விகளை அடைந்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஹைதராபாத் - ராஜஸ்தான் போட்டி

ஹைதராபாத் - ராஜஸ்தான் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. துபாயில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

ராஜஸ்தான் அணி தான் ஆடிய ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளை அடைந்து மோசமான நிலையில் உள்ளது. ஹைதராபாத் அணி ஆறில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி மிக அவசியமான ஒன்றாக இருந்தது.

நான்கு வீரர்கள் மாற்றம்

நான்கு வீரர்கள் மாற்றம்

இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக நான்கு வீரர்களை நீக்கி அதிர்ச்சி அளித்தார். ஆண்ட்ரூ டை, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், மஹிபால் லோம்ரார், வருண் ஆரோன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

அவர்களுக்கு பதில் ராபின் உத்தப்பா, ரியான் பராக், பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் தன் முதல் போட்டியில் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இளம் ஆல் - ரவுண்டர் அப்துல் சமத் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் விஜய் ஷங்கர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு அளித்திருந்தார் வார்னர்.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம் - ஜோஸ் பட்லர், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், ராகுல் திவேதியா, ஜோப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனட்கட், ஸ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம் - டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் ஷங்கர், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, ரஷித் கான், சந்தீப் சர்மா, கலீல் அஹ்மது, டி நடராஜன்

Story first published: Sunday, October 11, 2020, 15:43 [IST]
Other articles published on Oct 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+