Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தூக்கி எறிந்த வீரருக்கு மீண்டும் டீமில் இடம்.. ஒரே மேட்ச்சில் ஸ்டீவ் ஸ்மித் அந்தர் பல்டி!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த போட்டியில் ராபின் உத்தப்பாவை நீக்கி இருந்தார்.

உத்தப்பா கடந்த சீசனைப் போலவே மோசமான பார்மில் இருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்ட நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஒரே போட்டியில் பல்டி அடித்து அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

இதன் பின்னணியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் அணி நிலை

ராஜஸ்தான் அணி நிலை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் குவித்து வெற்றி பெற்று 2020 ஐபிஎல் சீசனை அபாரமாக துவக்கி இருந்தது. ஆனால், அடுத்த நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தது ராஜஸ்தான் அணி.

மீண்டும் சேர்ப்பு

மீண்டும் சேர்ப்பு

ராபின் உத்தப்பாவுக்கு இனி மீண்டும் ராஜஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்ட நிலையில், திடீரென ஹைதராபாத் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளித்து ஆச்சரியம் அளித்தார் ஸ்டீவ் ஸ்மித். இதற்கு என்ன காரணம் என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

ரஷித் கான்

ரஷித் கான்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த ஐபிஎல் சீசனில் மிரட்டலாக பந்து வீசி வருகிறார். அவரை சமாளிக்க முடியாமல் மற்ற அணிகள் அனைத்தும் திணறி வருகின்றன. இந்த நிலையில் தான் அவரை சமாளிக்க ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தப்பா செயல்பாடு

உத்தப்பா செயல்பாடு

ராபின் உத்தப்பா ரஷித் கானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். உத்தப்பா, ரஷித் கான் பந்துவீச்சுக்கு எதிராக 37 பந்துகளில் 62 ரன்கள் குவித்துள்ளார். ஐந்து இன்னிங்க்ஸ்களில் ஒரு முறை மட்டுமே அவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தாமதமாக ராஜஸ்தான் அணியில் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், இந்த சீசனில் தன் முதல் போட்டியில் பங்கேற்றார். அவரையும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட வைத்தார் ஸ்டீவ் ஸ்மித்.

டாஸ் வென்ற ஹைதராபாத்

டாஸ் வென்ற ஹைதராபாத்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. ஹைதராபாத் அணியில் விஜய் ஷங்கர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

Story first published: Wednesday, October 14, 2020, 21:06 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+