For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி 2 ஓவர்.. 35 ரன்கள்.. வெளுத்து வாங்கிய 2 ஹைதராபாத் வீரர்கள்.. ஏமாந்த ராஜஸ்தான்!

துபாய் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது.

அந்த அணி முதலில் நிதான ஆட்டம் ஆடி வந்தது. 160 ரன்களை எட்ட வாய்ப்பே இல்லாத நிலை நீடித்தது.

எனினும், கடைசி இரண்டு ஓவர்களில் கேன் வில்லியம்சன் - ப்ரியம் கார்க் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி அணியை மீட்டனர்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

2020 ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதரபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றார். துபாய் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறும் எனும் நிலையில் அவர் பேட்டிங் தேர்வு செய்தார்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் தன் முதல் போட்டியில் ஆடினார். அந்த அணி நான்கு மாற்றங்களை செய்திருந்தது. ஹைதராபாத் அணியை சமாளிக்க திட்டமிட்டு வீரர்களை களமிறக்கி இருந்தது. ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக அப்துல் சமத் நீக்கப்பட்டு விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றார்.

பேர்ஸ்டோ அவுட்

பேர்ஸ்டோ அவுட்

ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ துவக்கம் அளித்தனர். பேர்ஸ்டோ 19 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே, வார்னருடன் இணைந்து நிலையாக ஆடினார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இருவரும் விக்கெட் பறிபோகாமல் ஆடினாலும், விரைவாக ரன் குவிக்கவில்லை, துபாய் ஆடுகளம் ரன் குவிக்க கடினமாக மாறி இருப்பதால் அவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். வார்னர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மனிஷ் பாண்டே அரைசதம்

மனிஷ் பாண்டே அரைசதம்

அடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். நிதான ஆட்டம் ஆடிய மனிஷ் பாண்டே அதன் பின் வேகமாக ரன் சேர்த்தார். பாண்டே அரைசதம் கடந்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க் இணைந்து கடைசி 2 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடினர்.

19வது ஓவர்

19வது ஓவர்

18 ஓவர்களில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், 19வது ஓவரில் ஆர்ச்சர் பந்துவீச்சில் கேன் வில்லியம்சன் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது.

ஜோப்ரா ஆர்ச்சர் நிலை

ஜோப்ரா ஆர்ச்சர் நிலை

ஜோப்ரா ஆர்ச்சர் 3 ஓவர்களில் வெறும் 6 ரன்கள் கொடுத்திருந்தார். அனால், முடிவில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்தார். 20வது ஓவரை ஜெயதேவ் உனட்கட் வீசினார். அவர் 3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

20வது ஓவர்

20வது ஓவர்

அவர் வீசிய 20வது ஓவரில் ப்ரியம் கார்க் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார், அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. உனட்கட் 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் ஹைதராபாத் அணி 35 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ஏமாற்றம்

ராஜஸ்தான் ஏமாற்றம்

அதன் மூலம் 140 ரன்களுக்குள் ஹைதராபாத் அணியை சுருட்ட திட்டமிட்ட ராஜஸ்தான் அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடுவார் என்பதை ராஜஸ்தான் எதிர்பார்க்கவில்லை. கேன் வில்லியம்சன் 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்தார். ப்ரியம் கார்க் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

கடினம்

கடினம்

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் குவித்தது. துபாய் ஆடுகளத்தில் சேஸிங் செய்வது கடினம் என்பதால் 159 ரன்கள் என்ற இந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டுவது கடினம் என்றே கருதப்படுகிறது.

Story first published: Sunday, October 11, 2020, 20:19 [IST]
Other articles published on Oct 11, 2020
English summary
IPL News : SRH vs RR : David Warner, Manish Pandey helps SRH score 158 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+