Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2400 கோடி.. கொரோனாவாது கிரோனோவாது.. காசை அள்ளிய டிவி.. சில கோடிகள் மிஸ் ஆனதில் வருத்தமாம்!

மும்பை : 13வது சீசன் ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமை தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வசம் உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் விளம்பர வருவாய் குறையும் என முன்பு கூறப்பட்ட நிலையில் காசை அள்ளி இருக்கிறதாம் அந்த தொலைக்காட்சி.

2020 ஐபிஎல் சிக்கல்கள்

2020 ஐபிஎல் சிக்கல்கள்

2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கு நடுவே தொடங்கியது. கொரோனா வைரஸ் ஒருபுறம் பயமுறுத்த, மறுபுறம் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலையால் சில விளம்பரதாரர்கள் விலக வேண்டிய நிலை வந்தது. மேலும், கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முழுமையாக நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

வருமானம் குறையும்

வருமானம் குறையும்

மேலும், மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலை இழந்து தவித்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை பார்ப்பார்களா என்ற கேள்வியும் இருந்தது. நிறுவனங்கள் வருவாய் இழப்பால் அதிக அளவில் விளம்பரத்துக்கு செலவு செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டதால் தொடரை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வருமானம் குறையும் எனவும் கூறப்பட்டது.

ஹாட்ஸ்டார் ப்ரீமியம்

ஹாட்ஸ்டார் ப்ரீமியம்

இந்த நிலையில், தொலைக்காட்சி ஒளிபரப்பை இலவசமாகவே தொடர்ந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மொபைல் மற்றும் இணையத்தில் ஐபிஎல் போட்டிகளை ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. ஹாட்ஸ்டார் ப்ரீமியம் சந்தா செலுத்தினால் மட்டுமே போட்டிகளை காண முடியும் என கூறப்பட்டது.

கூட்டம் கூடும்

கூட்டம் கூடும்

ஆனாலும், மக்கள் லாக்டவுன் காரணமாகவும், கொரோனா வைரஸ் அச்சத்தாலும் வீட்டிலேயே இருப்பதால் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பியது பிசிசிஐ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ். அது உண்மை ஆனது.

2400 கோடி

2400 கோடி

இன்சைட்ஸ்போர்ட் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் அதிக பார்வையாளர்கள் காரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி 2020 ஐபிஎல் தொடரில் 2400 கோடி விளம்பர வருவாய் ஈட்டியதாக கூறி உள்ளது. இது எதிர்பார்த்ததை விட பெரிய வருமானம் ஆகும்.

கடந்த ஆண்டை விட அதிகம்

கடந்த ஆண்டை விட அதிகம்

தொலைக்காட்சி விளம்பரம் மூலம் 2250 கோடியும், ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் மூலம் 200 முதல் 250 கோடியும் வருவாய் ஈட்டி இருக்கலாம் எனவும் அந்த செய்தில் கூறப்பட்டுள்ளது. 2019 ஐபிஎல் தொடரின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொத்தமாக 2200 கோடி வருமானம் ஈட்டியது. அதை விட இது அதிகம்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

ஐபிஎல் போட்டிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. முதல் 41 ஐபிஎல் போட்டிகளை பார்த்த மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 10.8 கோடி ஆகும், கடந்த ஆண்டு முதல் 41 போட்டிகளின் போது இது 9.8 கோடியாக இருந்தது,

பார்க் கணக்கு

பார்க் கணக்கு

பார்க் நிறுவனம் முதல் 41 ஐபிஎல் போட்டிகளின் முடிவில் 700 கோடி பார்வையாளர்கள் நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறி உள்ளது. கடந்த ஆண்டு இதே 41 போட்டிகளின் முடிவில் 550 கோடி பார்வையாளர்கள் நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகம் ஆகும்.

வருமானம் ஏறவில்லை

வருமானம் ஏறவில்லை

பார்வையாளர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்த நிலையில், வருமானம் ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 85 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டது தான் என்கிறார்கள். அந்த வகையில் அந்த தொலைக்காட்சிக்கு இது வருத்தம் தான்.

ஹாட்ஸ்டார் ப்ரீமியம் தனி

ஹாட்ஸ்டார் ப்ரீமியம் தனி

விளம்பர வருமானம் தவிர்த்து ஹாட்ஸ்டார் ப்ரீமியம் மூலம் பல கோடி வருமானம் கிடைத்திருக்கும். ஐபிஎல் போட்டிகளை காண கோடிக்கணக்கானோர் ஹாட்ஸ்டார் சந்தாதாரர்களாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 13, 2020, 10:44 [IST]
Other articles published on Nov 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+