For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா ஆளையே காணோம்.. ஐபிஎல் ஏலத்தில் காணாமல் போன முக்கிய வீரர்!

Recommended Video

Maxwell takes break from cricket | மன ஆரோக்கிய பிரச்னை : மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு!

டெல்லி : ஐபிஎல்லில் கடந்த 2015ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களமிறங்கிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஐபிஎல்லில் காணமுடியவில்லை. ஆனால் அந்த அணியின் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் கிறிஸ் லின் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

ஐபிஎல் 2020க்கான ஏலம் வரும் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச அளவில் பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு சர்வதேச அளவில் பல முன்னணி வீரர்களுக்கு ஏலத்தில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணி வீரர்கள் 971 பேர் கலந்துகொள்ளவுள்ள நிலையில், ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியாவின் மிட்செல் மாக்ஸ்வெல், இங்கிலாந்தின் ஜோ ரூட் போன்றவர்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை.

 19ம் தேதி கொல்கத்தாவில் ஏலம்

19ம் தேதி கொல்கத்தாவில் ஏலம்

ஐபிஎல் 2020 தொடருக்கான அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் கொல்கத்தாவில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் ஐபிஎல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 ஐபிஎல் அணிகள் முனைப்பு

ஐபிஎல் அணிகள் முனைப்பு

ஏலத்திற்கு முன்னதாகவே தங்களது அணியின் முக்கிய வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் தேர்வு செய்து வருகின்றன. அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏலத்தில் பங்கேற்கவில்லை

ஏலத்தில் பங்கேற்கவில்லை

மாற்றங்களை எதிர்நோக்கி ஐபிஎல் போட்டிகள் காத்திருக்கும் நிலையில், ஏற்கனவே ஐபிஎல்லில் பங்கேற்று விளையாடிய ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இவர் கடந்த 2015ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக பங்கேற்று விளையாடினார்.

 ஆஸி. உலக கோப்பை சாம்பியன்ஷிப்

ஆஸி. உலக கோப்பை சாம்பியன்ஷிப்

கடந்த 2018 ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 9.4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மிட்செல், காயம் காரணமாக அந்த தொடரில் விளையாடவில்லை. இதேபோல இந்த ஆண்டும் ஆஸ்திரேலியா உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஐபிஎல்லை அவர் தவிர்த்தார்.

 அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயம்

அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயம்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் கிறிஸ் லின் உள்ளிட்ட 7 வீரர்கள் அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்களின் அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 தென்னாப்பிரிக்கா, இலங்கை வீரர்கள்

தென்னாப்பிரிக்கா, இலங்கை வீரர்கள்

இதேபோல ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பாட் கமின்ஸ், ஜோஸ் ஆசல்வுட் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தென்னாப்பிரிக்காகவின் டேல் ஸ்டெயின், இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் ஆங்கெலோ மாத்யூஸ் போன்றவர்களும் தங்களது அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை ஏலத்திற்காக நிர்ணயம் செய்துள்ளனர்.

 ஏலத்தில் பங்கேற்கவில்லை

ஏலத்தில் பங்கேற்கவில்லை

இதேபோல ஐபிஎல்லில் பங்கேற்று சிறப்பான தருணங்களை பதிவாக்கிய இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து மாயமாகியுள்ளார். அவரும் இந்தாண்டு ஏலத்தில் பங்கேற்கவில்லை.

Story first published: Tuesday, December 3, 2019, 12:57 [IST]
Other articles published on Dec 3, 2019
English summary
Maxwell and Lynn listed their names in IPL 2020 Auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+