Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை நம்பி பயனில்லை.. வீரர்களிடம் எகிறிய அந்த நபர்.. சிஎஸ்கேவில் பரபர மாற்றம்.. வெளியான உண்மை!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை தாண்டி அதிகாரம் செலுத்தத் துவங்கி உள்ளார் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதற்கு காரணம் பிளெம்மிங் தன் அணுகுமுறையை மாற்றியது தான் என தெரிய வந்துள்ளது. தோனியின் அமைதியான, கேப்டன் கூல் அணுகுமுறை வேலை செய்யாது என முடிவு செய்து தானே சில முடிவுகளை எடுக்கத் துவங்கி உள்ளார் பிளெம்மிங்.

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே தோல்விகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் தான் ஆடிய முதல் நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்து பரிதாப நிலையில் இருந்தது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருந்தது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

அந்த மூன்று போட்டிகளின் தோல்விகளும் சேஸிங் செய்யும் போது ஏற்பட்டது தான். சிஎஸ்கே வீரர்கள் கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் முதல் பத்து ஓவர்களில் டெஸ்ட் போட்டி போல விக்கெட்டை தற்காத்துக் கொண்டு ஆடியது தான் தோல்விகளுக்கு முக்கிய காரணம்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இதில் நான்காவது போட்டிக்கு முன் அணியையும் மாற்றினார் தோனி. பிராவோ, அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டனர். இதை அடுத்து ஆறு பந்துவீச்சாளர்கள், 9 பேட்ஸ்மேன்கள் என சமநிலையுடன் இருந்தது சிஎஸ்கே. அப்படியும் நான்காவது போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

வீரர்களின் மனநிலை

வீரர்களின் மனநிலை

அணியை மாற்றிய பின்னும் தோல்வி என்றால் எங்கே தவறு? வீரர்களின் மனநிலை தான் தவறு. தோனி போலவே அனைத்து வீரர்களும் "கூலான" மனநிலையில் ஆடுவதால் தான் ஆட்டத்தில் பரபரப்பு இன்றி மந்தமாக ஆடி தோற்கிறார்கள்.

தோனியை நம்பி பயனில்லை

தோனியை நம்பி பயனில்லை

கூலான மனநிலை தோனிக்கு ஒத்து வரலாம். ஆனால், எல்லா வீரர்களும் அது பொருந்தாது. எல்லோரும் அப்படி இருந்தால் அது அணியை பாதிக்கும். தோனி தன் வீரர்களிடம் ஒரு அளவுக்கு மேல் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார் என்பது தெரிந்த ஒன்று தான். இனி அவரை நம்பி பயனில்லை என பயிற்சியாளர் பிளெம்மிங் களத்தில் குதித்தார்.

சாட்டையை எடுத்த பிளெம்மிங்

சாட்டையை எடுத்த பிளெம்மிங்

பஞ்சாப் அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டிக்கு முன் அணிக் கூட்டத்திலும், பயிற்சியிலும் ஸ்டீபன் பிளெம்மிங் சாட்டையை சுழற்றியதாக கூறப்படுகிறது. அணியை மாற்றப் போவதில்லை. ஆனால், வீரர்கள் தங்கள் ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை அழுத்தமாக கூறி இருக்கிறார்.

போட்டியில் கோபம்

போட்டியில் கோபம்

இதை அடுத்து பஞ்சாப் போட்டியில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடியது. பந்துவீச்சில் சில ஓவர்களில் அதிக ரன்கள் போன போது அப்போதே கோபத்தை வெளிப்படுத்தினார் பிளெம்மிங். அவரை இப்படி கோபப்பட்டு பார்த்ததே இல்லையே என ரசிகர்களும் அதிர்ந்து போனார்கள்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 179 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது சிஎஸ்கே அணி. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் தங்கள் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை விக்கெட் விழாமல் ஆடி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற வைத்தனர்.

டுபிளெசிஸ் என்ன சொன்னார்?

டுபிளெசிஸ் என்ன சொன்னார்?

பாப் டுபிளெசிஸ் வெற்றிக்கு பின் பேசுகையில் பிளெம்மிங் கோபப்பட்டதை பற்றி பேசினார். அப்போது பிளெம்மிங் அணுகுமுறை மாறி இருப்பதை கேலியாக குறிப்பிட்டார். அவர் இதுவரை இல்லாத மாதிரி நடந்து கொண்டார். அவர் கோபத்திற்கு காரணம் அவர் வளர்க்கும் தாடியாக இருக்கலாம் என கிண்டல் செய்தார்.

தோனி சொன்ன விஷயம்

தோனி சொன்ன விஷயம்

தோனி வெற்றிக்கு பின் கூறுகையில், தனக்கும், பிளெம்மிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என கூற முடியாது. ஆனால், எல்லா விஷயங்களையும் சேர்ந்தே முடிவு செய்கிறோம் என குறிப்பிட்டார். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார் தோனி.

Story first published: Monday, October 5, 2020, 18:25 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+