Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதும் ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

துபாய் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் செயல்பட உள்ளது.

கடந்த இரண்டு சீசன்களில் கேன் வில்லியம்சன் தலைமையில் செயல்பட்ட அந்த அணி இந்த முறை மீண்டும் முந்தைய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் செயல்பட உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2018 சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும் கடந்த முறை மோசமான நிலைக்கு சென்றது. டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ துவக்க ஜோடி அதிரடியாக ரன் குவித்த போதிலும் அந்த அணி அவர்கள் இல்லாத நிலையில் பின்பகுதியில் தடுமாறியது.

வெற்றிக்கு முயற்சி செய்யும்

வெற்றிக்கு முயற்சி செய்யும்

இந்த முறை குறைகளை களைந்து மீண்டும் சன்ரைசர்ஸ் அணி புது உத்வேகம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். 2016 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றது போல இந்த முறையும் வெல்ல அந்த அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

கேன் வில்லியம்சன், வார்னர், பேர்ஸ்டோ, புவனேஸ்வர் குமார், ரஷித் கான், முகமது நபி என பல நட்சத்திர வீரர்கள் உள்ள அணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த அணிக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இந்த அணி செப்டம்பர் 21 அன்று தன் முதல் போட்டியில் ஆட உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பங்கேற்க உள்ள அனைத்து லீக் சுற்றுப் போட்டிகள், அவை நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை இங்கே காணலாம்.

  • செப்டம்பர் 21, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 29, டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 2, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 4, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 8, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 11, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், மாலை 3:30 மணி
  • அக்டோபர் 13, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 18, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 22, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 24, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 27, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 31, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • நவம்பர் 3, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
Story first published: Sunday, September 6, 2020, 21:51 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+