
சுரேஷ் ரெய்னா விலகல்
அதன் அப்போது சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் தொடரில் இருந்தே விலகினார். அவர் இந்த சீசன் முழுவதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது. அப்போது ரெய்னா அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தோனி - ரெய்னா விரிசல்
அதன் பின் சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கருத்து வேறுபாட்டில் பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. அது உண்மை தான் என கூறும் வகையில், உரிமையாளர் சீனிவாசன் ரெய்னாவை கடுமையாக தாக்கிப் பேசினார்.

வர விருப்பம்
சில நாட்கள் கழித்து பேசிய சுரேஷ் ரெய்னா தான் குடும்பம் காரணமாக இந்தியா திரும்பியதாகவும், மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடுவேன் என்றும் அறிவித்தார். ஆனால், சிஎஸ்கேவில் இருந்து அதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. கேப்டன் தோனி தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்பதோடு முடித்துக் கொண்டார்கள்.

ஏமாற்றம்
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே சிஎஸ்கே அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சிஎஸ்கேவின் முதல் போட்டிக்கு முன் தான் இந்தப் போட்டியில் ஆடாதது தனக்கு பெரும் ஏமாற்றமாக இருப்பதாக ரெய்னா தெரிவித்தார்.

சிஎஸ்கே தோல்விகள்
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஆனால், அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சொதப்பி தோல்வி அடைந்தது. அப்போது ரெய்னா பற்றி ரசிகர்கள் பேசத் துவங்கினர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ரெய்னா விரைவில் சிஎஸ்கே அணியில் இணைவார் என ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அது உண்மை இல்லை என பின்னர் தெரிய வந்தது.

சிஎஸ்கே நிர்வாகம் மறுப்பு
அதை மறுத்து சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், நாங்கள் ரெய்னாவை மீண்டும் சேர்ப்பதை பற்றி யோசிக்க முடியாது. அவர் தானாகவே தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். அதை நாங்கள் யோசிக்கவில்லை என்றார்.

அந்த வார்த்தைகள்
சுரேஷ் ரெய்னா தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைவேன் எனக் கூறியும், முதல் போட்டியில் தான் ஆடவில்லை என்பதை நம்ப முடியவில்லை எனக் கூறிய நிலையிலும் சிஎஸ்கே நிர்வாகம் அவராகவே விலகி விட்டார், அவர் முடிவை மதித்து அவரை அணியில் சேர்ப்பதை பற்றி யோசிக்கவில்லை எனக் கூறி இருப்பது விசித்திரமான காரணமாக உள்ளது.

அதிர்ச்சியில் ரெய்னா
தான் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்த நிலையிலும், பொதுவெளியில் அதற்கு மாறாக அவரது முடிவை மதித்து அவரை அணியில் சேர்க்கவில்லை என சிஎஸ்கே நிர்வாகம் கூறி இருப்பதை கண்டு ரெய்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வதந்தி
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியை ட்விட்டரில் அன்பாலோ செய்து விட்டதாக ஒரு செய்தி பரவியது. அந்த அளவுக்கு ரெய்னா - சிஎஸ்கே மோதல் முற்றி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications