Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி 3வது இடத்தில் இறங்கி அடிக்கணும்... கம்பீரை தொடர்ந்து ரெய்னாவும் கோரிக்கை

டெல்லி : சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 3வது இடத்தில் இறங்கி ஆட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

IPL 2020 Schedule-வெளியாவதில் தாமதம் ஏன்? | Oneindia Tamil

முன்னதாக சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாத நிலையில் தோனி 3வது இடத்தில் இறங்கி ஆட வேண்டும் என்றும் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அவுட்லுக் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள சுரேஷ் ரெய்னா முதலில் ஐபிஎல் அட்டவணை வெளியாகட்டும் என்றும் எல்லாம் சரியாக நடந்தால் தான் மீண்டும் அணியில் இணைவேன் என்றும் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் நெருக்கடி

கொரோனா பாதிப்பால் நெருக்கடி

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக மிகுந்த உற்சாகத்துடன்தான் சிஎஸ்கே அணி வீரர்கள் துபாய்க்கு சென்றனர். முன்னதாக 6 நாட்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியிலும் ஈடுபட்டனர். ஆனால் துபாய் சென்றவுடன் மேற்கொள்ளப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் 2 வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் அணி கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது.

சொந்த காரணங்களால் நாடு திரும்பிய ரெய்னா

சொந்த காரணங்களால் நாடு திரும்பிய ரெய்னா

இதனிடையே, அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் சொந்த காரணங்களால் அணியில் இணையாமல் நாடு திரும்பியதும் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் தற்போது அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அணி வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இன்றுமுதல் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.

3வது இடத்தில் ஆட தோனி சிறந்தவர்

3வது இடத்தில் ஆட தோனி சிறந்தவர்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 3வது இடத்தில் இறங்கி அடிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அவுட்லுக் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய 3வது இடம் தற்போது காலியாக உள்ள நிலையில் அதில் இறங்கி விளையாட தோனியே சிறந்தவர் என்று கூறியுள்ளார்.

ஆட்டத்தை மாற்றும் திறன்

ஆட்டத்தை மாற்றும் திறன்

கடந்த 2005 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனி அடித்த 148 ரன்களை யாரும் மறக்க முடியாது. தோனிக்கு மட்டுமே 3வது இடத்தில் இறங்கி விளையாட அனுபவம் உள்ளது என்று ரெய்னா தெரிவித்துள்ளார். தற்போதும் தனிநபராக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை தோனிக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணியில் இணைவேன் -ரெய்னா

அணியில் இணைவேன் -ரெய்னா

மேலும் தற்போது தான் தினந்தோறும் பயிற்சி எடுத்து வருவதாகவும் தன்னை பிட்டாகவும் தயாராகவும் வைத்துக் கொண்டிருப்பதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். முதலில் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படட்டும் என்றும் எல்லாம் சரியாக நடைபெறும் சூழலில் தான் மீண்டும் அணியில் இணைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, September 4, 2020, 17:46 [IST]
Other articles published on Sep 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+